புதுகோட்டையில் 04.10.2019 நாளை தனியார் வேலைவாய்ப்பு முகாம்



புதுக்கோட்டை மாவட்டத்தில் படித்து வேலைவாய்ப்பின்றி காத்திருக்கும் இளைஞர்களுக்கு தனியார் துறைகளில் பணியமர்த்தம் செய்யும் நோக்கத்தோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் நடத்தும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை 04.10.2019
(வெள்ளிக்கிழமை) புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் வழிகாட்டும் மையத்தில் காலை 10.30 மணி அளவில் நடைபெற உள்ளது.

இம்முகாமில் பல்வேறு தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான நபர்களை தேர்வு செய்ய உள்ளனர்.

இம்முகாமில் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 10ம் வகுப்பு முதல் பட்டபடிப்பு வரை கல்வித் தகுதிகளை உடைய வேலைநாடுநர்கள் கலந்து கொள்ளலாம் என கலெக்டர் உமா மகேஸ்வரி தெரிவித்துள்ளார்.

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments