சிறுபான்மையினருக்கு உதவித்தொகை அளித்து ஆயத்த ஆடை பயிற்சி



வேலையில்லாத சிறுபான்மையினர் இலவச திறன் வளர்ப்புப் பயிற்சித் திட்டத்தில் சேர்ந்து பயன்பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் பி. உமா மகேஸ்வரி அழைப்புவிடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியது:

இத்திட்டத்தின் கீழ்  எம்பிராய்டரி பயிற்சிக்கு 50 பயனாளிகளுக்கு 3 மாதம் நடத்தப்பட உள்ளது.

இத்திட்டத்தின் கீழ் இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், புத்த மதத்தினர், சீக்கியர்கள், பார்சிகள் மற்றும் ஜெயின் பிரிவைச் சார்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். 

பயிற்சியின்போது ரூ.ஆயிரம் பயிற்சி உதவித்தொகையாக அளிக்கப்படும்.

உண்டு உறைவிடக் கட்டணம் ஏதும் வழங்கப்படாது. 

இதற்கான நேர்காணல் திருவள்ளூர்  ஜெயா நகர், சி.வி.நாயுடு தெருவில் உள்ள ஆயத்த ஆடை பயிற்சி மையத்தில் அக். 3 முற்பகல் 11 மணிக்கு நடைபெற உள்ளது.

மேலும் விவரங்களுக்கு 93805 13874 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments