தரமான கிப்ட் திலேப்பியா மீன் குஞ்சுகளை வளர்க்க அறிவுறுத்தல்



விவசாயிகள் மற்றும் மீன் வளர்ப்போர் தரமான "கிப்ட் திலேப்பியா' இன மீன்குஞ்சுகளை வாங்கி வளர்க்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் பி. உமா
மகேஸ்வரி அறிவுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியது:

கிப்ட் திலேப்பியா என்றழைக்கப்படும் மீன்களில் அதிகளவில் புரதங்களும், அபரிமிதமான ஊட்டச்சத்துகளும் நிறைந்துள்ளன. குறுகிய காலத்தில் வேகமாக வளரும் இம்மீன்கள் மிகுந்த நோய் எதிர்ப்பு சக்தி திறன் கொண்டவை.

கிப்ட் திலேப்பியா மீன்
திலேப்பியா மீன்
















மேலும் இம் மீன்குஞ்சுகள் அனைத்தும் வேகமாக வளரக்கூடிய தன்மையுள்ளதாலும், மீன்வளர்ப்போருக்கும் குறுகிய காலத்தில் அதிக லாபம் மற்றும் வருவாயை ஈட்டித் தரக்கூடிய மீனினமாகவும் திகழ்கிறது.

இத்தகைய தரமான மீன்குஞ்சுகள் தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி அரசு மீன்குஞ்சு உற்பத்தி பண்ணையிலும், மதுரையில் இயங்கி வரும் அரசு அனுமதி பெற்ற தனியார் மீன்குஞ்சு பண்ணையில் மட்டுமே கிடைக்கும்.

இவ்விரு பண்ணைகள் தவிர பிற இடங்களில் பெறப்படும் குஞ்சுகள் விரைவில் இனப்பெருக்கம் செய்வதுடன் வளர்ச்சி மிகவும் குறைந்து காணப்படும்.

மேலும் ஏற்கெனவே கிப்ட் திலேப்பியா மீன்வளர்ப்பில் ஈடுபட்டுள்ளவர்கள் தங்களது பண்ணை அல்லது குட்டைகளை மீன்வளத் துறையில் பதிவு செய்வது அவசியம். 

மேலும் விவரங்களுக்கு, மீன்வள உதவி இயக்குநர் அலுவலகம், எண் 1, லெட்சுமிபுரம் முதல் வீதி, புதுக்கோட்டை -1. தொலைபேசி எண் 04322-220069.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments