தமிழகம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளுக்கான வாக்காளர் பட்டியல் வெளியீடு..



தமிழ்நாட்டில் உள்ள ஊரகம் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி சாதாரணத் தேர்தல்களுக்கான வாக்காளர் பட்டியல், 2019 தொடர்புடைய சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியல்களில் உள்ள விவரங்களை கொண்டு தயாரிக்கப்பட்டு அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளில் வாக்காளர் பதிவு அலுவலரால் வெளியிட மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதை அடுத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கான வாக்காளர் பட்டியல்  வெளியிடப்பட்டது.

மேற்கண்ட வாக்காளர் பட்டியல்களின் வரைவு பட்டியலை தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் http://www.tnsec.tn.nic.in/ என்ற இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இந்த வசதியை பயன்படுத்தி வாக்காளர்கள் தங்களின் பெயர், எந்த வார்டு மற்றும் எந்த வாக்குச்சாவடியில் உள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம்.

2019 ம் ஆண்டு உள்ளாட்சி அமைப்புகளுக்கான வாக்காளர் பட்டியலில் உங்கள் வாக்குச்சாவடியை அறிந்து கொள்ளுங்கள்

http://www.tnsec.tn.nic.in/tn_election/find_your_polling_station.php

படி 1 :  உங்கள் வாக்காளர் அடையாள அட்டையில் உள்ள நம்பரை டைப் செய்யுங்கள்.

படி 2 : Captacha எழுத்தை டைப் செய்யுங்கள்.

படி 3 : Show Result என்ற பட்டனை அழுத்தவும், பிறகு  தங்களின் பெயர், எந்த வார்டு மற்றும் எந்த வாக்குச்சாவடியில் உள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம்.

உள்ளாட்சி அமைப்புகளுக்கான வாக்காளர் பட்டியலில் இடம்பெறாத வாக்காளர்கள் முதலில் அவர்கள் தொடர்புடைய சட்டமன்ற தொகுதிக்கான வாக்காளர் பட்டியலில் அவர்களது பெயர்களை சேர்க்க வேண்டும்.

அதற்கு அவர்கள் தொடர்புடைய சட்டமன்ற தொகுதிக்கான வாக்காளர் பதிவு அலுவலரிடமோ அல்லது தொடர்புடைய இணையதளத்திலோ (online)சென்று அவர்களது பெயர்களை சட்டமன்ற தொகுதிக்கான வாக்காளர் பட்டியலில் சேர்க்கலாம்.

http://www.tnsec.tn.nic.in/tn_election/electoral_roll_download.php
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments