புதுக்கோட்டை மாவட்டத்தில் கிழக்கு கடற்கரை சாலையில் குவிந்து கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகள்புதுக்கோட்டை மாவட்டத்தின் கிழக்கு கடற்கரை சாலையின் ஓரங்களில் தேங்கியுள்ள பிளாஸ்டிக் கழிவுகளில் ஏடிஸ் கொசுக்கள் உற்பத்தியாகி மக்களை கடிப்பதால் டெங்கு காய்ச்சல் அதிக அளவில் பரவி வருகிறது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடப்பட்டுள்ளது.

 புதுக்கோட்டை மாவட்டத்தின் கட்டுமாவடி தொடங்கி, ஏனாதி வரையிலான கிழக்கு கடற்கரை சாலையில் மணமேல்குடி, ஆவுடையார்கோவில் ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன.

இதில் கட்டுமாவடி, கிருஷ்ணாஜிபட்டினம், மும்பாலை, மணமேல்குடி, அம்மாபட்டினம், கோட்டைப்பட்டினம், மீமிசல், கீழமஞ்சக்குடி ஊராட்சிகளின் பெரும்பாலான பகுதிகள், காரக்கோட்டை, இடையாத்திமங்கலம், விச்சூர் ஊராட்சிகளின் சில பகுதிகள் கிழக்கு கடற்கரை பகுதியில் வருகின்றன.

இந்த சாலையில் கட்டுமாவடி, கிருஷ்ணாஜிபட்டினம், மணமேல்குடி, அம்மாபட்டினம், கோட்டைபட்டினம், ஜெகதாபட்டினம், மீமிசல் பகுதிகளில் அதிக அளவிலான கடைகள் உள்ளன. இதுதவிர காரக்கோட்டை பாலம், மும்பாலை, புதுக்குடி உள்ளிட்ட பகுதிகளில் குறைந்த எண்ணிக்கையிலான கடைகள் உள்ளன.

இப்பகுதியில் உள்ள கடைகள் மற்றும் வீடுகளில் சேரும் பிளாஸ்டிக் கழிவுகளை அதிகம் கொண்ட குப்பைகளை உள்ளாட்சி நிர்வாகம் சேகரித்து, சாலை ஓரங்களில் கொட்டி வைக்கின்றனர்.

இந்த குப்பைகள் காற்றில் பறந்து செல்கின்றன. மேலும் பல வாரங்களாக சேர்ந்து கிடக்கும் பிளாஸ்டிக் குப்பைகளில் மழைநீர் தேங்குகிறது. பின்னர் இந்த தண்ணீரில் பகல்நேரத்தில் மக்களை கடிக்கும் ஏடிஸ் கொசுக்கள் ஆயிரக்கணக்கில் உருவாகின்றன. இந்த கொசுக்கள் நீண்ட தூரம் சென்று மக்களை கடிப்பதால், புதுக்கோட்டை மாவட்டத்தின் கிழக்கு கடற்கரை சாலையில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.

ஓவ்வொரு நாட்டின் பெருமையே அந்த நாட்டின் தூய்மையில்தான் உள்ளது. இடம் தூய்மையாக இருந்தால், எந்த நோயும் பரவாது என்பது நிதர்சனமான உண்மை.

அதனால்தான் மத்திய அரசு தூய்மைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. மத்திய அரசின் கொள்கைக்கு மாறாக கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள மணமேல்குடி மற்றும் ஆவுடையார்கோவில் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் ஆங்காங்கே பிளாஸ்டிக் கழிவு குப்பைகள் குவிந்து கிடப்பது வேதனைக்குறியது.

எனவே மாவட்ட நிர்வாகம் மணமேல்குடி மற்றும் ஆவுடையார்கோவில் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்றி, டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஏடிஸ் கொசுக்களால் டெங்கு பரவும் அபாயம் பல வாரங்களாக சேர்ந்து கிடக்கும் பிளாஸ்டிக் குப்பைகளில் மழைநீர் தேங்குகிறது. பின்னர் இந்த தண்ணீரில் பகல்நேரத்தில் மக்களை கடிக்கும் ஏடிஸ் கொசுக்கள் ஆயிரக்கணக்கில் உருவாகின்றன. இந்த கொசுக்கள் நீண்ட தூரம் சென்று மக்களை கடிப்பதால், புதுக்கோட்டை மாவட்டத்தின் கிழக்கு கடற்கரை சாலையில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments