இந்திய கால்பந்து அணிக்கு இராமநாதபுரத்தை சேர்ந்த வீரர் தேர்வு !!



இந்திய கால்பந்து அணிக்கு ராமநாதபுரம் மாவட்ட கல்லுாரி மாணவன் தேர்வாகி உள்ளார்.

கீழக்கரை முகம்மது சதக் இன்ஜினியரிங் கல்லுாரியில் மூன்றாமாண்டு எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங்படிப்பவர் ராமநாதபுரத்தை சேர்ந்த அபுல் ஜராருதீன் 19.

இவர் 19 வயதிற்குட்பட்ட இந்திய கால்பந்து அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

வரும் டிச., மாதம் அரபு நாடுகளில் ஒன்றான கத்தார் நாட்டில் நடக்கும் ஆசிய அளவிலான கால்பந்து போட்டியில் இவர் பங்கேற்க உள்ளார்.

கால்பந்து வீரர் அபுல் ஜராரூதீனை முகம்மது சதக் அறக்கட்டளை தலைவர் முகம்மது யூசுப் சாகிப், கல்லுாரி இயக்குநர் ஹாமீது இப்ராகீம், முதல்வர் அப்பாஸ் மைதீன், உடற்கல்வி துறைத்தலைவர் சுரேஷ்குமார் உட்பட பேராசிரியர்கள் பாராட்டினர்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments