சவுதியில் தாய்லாந்து லாட்டரி என்று சொல்லப்படுகின்ற சூதாட்டத்தில் ஈடுபட்டவர் கைது..!



சவூதி அரேபியா ஜுபைலில் அமைந்திருக்கும் சிறைச்சாலைக்குள் அல்ஜுபைல் தஃவா நிலைய சக தாயிகளுடன் (அழைப்பாளர்களுடன்) சென்று நேற்றைய தினம் (1.10.2019) தமிழ் பேசும் கைதிகளை சந்தித்து தஃவா செய்யக்கூடிய வாய்ப்பு அல்லாஹ்வின் உதவியால் கிடைத்தது.
கடந்த 7 மாதமாக ஜெயிலில் இருக்கும் அதிராம்பட்டினத்தைச் சார்ந்த ஒரு முஸ்லிம் சகோதரரை சந்தித்து தஃவா செய்யக்கூடிய வாய்ப்பு கிடைத்தது எந்த குற்றத்தை செய்து ஜெயிலுக்கு வந்தீர்கள்.! என்று அவரிடம் வினவினேன். அவர் சொன்ன காரணம் என்னை திகைப்பில் ஆற்றியது.! ஆம்!!!


தாய்லாந்து லாட்டரி என்று சொல்லப்படுகின்ற சூதாட்ட லாட்டரியில் ஈடுபட்டபொழுது என்னை சவூதி போலிஸ் கைது செய்தார்கள் என்று கவலையுடன் சொன்னார்...

சகோதரர்களே வேண்டாம் சூதாட்டம்..

பல லட்சக்கனக்கான தொழிலாளர்கள் வன்ன வன்ன கனவுகளுடன் வெளிநாட்டு வேலைக்காக வந்தாலும் எல்லோருக்கும் சரியான வேலை அதற்கான வாய்ப்பு அமைந்து விடுவதில்லை. சிலருக்கு நல்ல வேலை கிடைத்தும் மனநிறைவு அடைவதில்லை. மேலும் எப்படியெல்லாம் சம்பாதிக்கலாம் என்று யோசிக்கிறார்கள், யோசித்து சரியான வழிகளில் முயற்சிப்பது தவறு இல்லை அது வரவேற்க வேண்டிய ஆரோக்கியமான விஷயமும் கூட ஆனால்..?

பணம் ஒன்றே குறிக்கோளாய் குறுக்கு வழியில் எப்படியாவது சம்பாதித்து விட வேண்டும் என்ற எண்ணமே பல தகாத அசிங்கமான தொழில்களுக்கும் செயல்களுக்கும் ஈட்டு செல்கிறது. அரபிகள் நம்பி ஒப்படைத்து செல்லும் அலுவலகத்தில், கடைகளில் திருடுவது, சாரயம் காய்ச்சுவது, வட்டிக்கு விடுவது, கள்ளத்தானமாக சூதாடுவது இவையெல்லாம் இங்கு தடை செய்யப்பட்டு இருந்தும் அதனை மீறி செயல்படுவது இதனால் சிலர் ஆதாயமடைய பலரின் வாழ்க்கையை நாசமாகி விடுகிறது.

திருக்குர்ஆன் இப்படி எச்சரிக்கிறது!

நிச்சயமாக ஷைத்தான் விரும்புவதெல்லாம், மதுபானத்தைக் கொண்டும், சூதாட்டத்தைக் கொண்டும் உங்களிடையே பகைமையையும், வெறுப்பையும் உண்டு பண்ணி அல்லாஹ்வின் நினைவிலிருந்தும், தொழுகையிலிருந்தும் உங்களைத் தடுத்து விடத்தான். எனவே, அவற்றை விட்டும் நீங்கள் விலகிக் கொள்ள மாட்டீர்களா? (திருக்குர்ஆன்: 5-91)

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மக்களுக்கு ஒரு காலம் வரும் அக்காலத்தவர் தமது சம்பாத்தியம் (ஹலாலானதா, ஹராமானதா) முறையானதா, முறையற்றதா என்பவனவற்றைப் பொருட்படுத்தாது இருப்பர். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி

Source:


கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments