பள்ளிகளுக்கான தீபாவளி விடுமுறை அறிவிப்புபள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,
தீபாவளி பண்டிகை வருகிற 27-ந்தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இந்த முறை ஞாயிற்றுக்கிழமை அரசு விடுமுறை நாளில் தீபாவளி பண்டிகை வருவதால் தொடர் விடுமுறைக்கு வாய்ப்பு இல்லாமல் போனது.

 26-ந்தேதி சனிக்கிழமை கூட பள்ளிகளுக்கு வேலை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. வருடத்திற்கு 210 நாட்கள் பள்ளிகள் செயல்பட வேண்டும் என்ற விதியின்படி தீபாவளிக்கு முந்தைய நாளான சனிக்கிழமை (26-ம் தேதி)  வேலை நாளாக அறிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்பு ஆசிரியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தீபாவளி பண்டிகை ஞாயிற்றுக்கிழமை  (27-ம் தேதி) வருவதால் சனிக்கிழமையும் (26- ம்தேதி) விடுமுறை தினமாக அறிவிக்க வேண்டும் என  பள்ளிக்கல்வித்துறைக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்நிலையில் தீபாவளிக்கு முன்னதாக சனிக்கிழமை பள்ளிகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது (26-ம் தேதி)  பள்ளிகளுக்கு விடுமுறையாக அறிவித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

தீபாவளி தினத்தை முன்னிட்டு வரும் அக்., 26, 27 ஆகிய தேதிகளில் பள்ளிகளுக்கு விடுமுறை.

அக்., 28 ம் தேதி வேலைநாள் என்பதால், அந்த நாளில் விடுமுறை விட விரும்பும் பள்ளிகள் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளிடம் அனுமதிப்பெற்று விடுமுறை விடலாம்.

அவ்வாறு வேலைநாளில் விடுமுறை விடும் பள்ளிகள், ஏதேனும் ஒரு சனிக்கிழமை பள்ளி வேலைநாளாக அறிவிக்கலாம்.

இவ்வாறு பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a comment

0 Comments