வேகமாக பரவும் டெங்கு காய்ச்சலை ஒழிக்க உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்!வேகமாக பரவும் டெங்கு காய்ச்சலை ஒழிக்க உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்! மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்!!

மனிதநேய மக்கள் கட்சி தலைவர் 
பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:

 தமிழகத்தில் சென்னை, கோவை உள்ளிட்ட மாநகரங்களில் வேகமாகப் பரவி வரும் டெங்கு காய்ச்சலை ஒழிக்கத் தமிழக அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
 கடந்த சில நாட்களாக டெங்குகாய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது.

 தமிழகத்தில் 2951 பேருக்கு டெங்கு காய்ச்சால் பதிப்பு உள்ளதென்று அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் டெங்குவைக் கட்டுப்படுத்த, தமிழக சுகாதாரத் துறை உறுதியான நடவடிக்கையை எடுக்க வேண்டும்.

 மேலும், டெங்குகாய்ச்சல் பற்றிய விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்து தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்களாகிய நாமும் நமது சுற்றுப்புறங்களைத் தூய்மையாக வைத்து, டெங்கு கொசு உற்பத்தியாகுவதைத் தடுக்க வேண்டும் என்றும் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

இப்படிக்கு
எம் எச் ஜவாஹிருல்லாஹ்
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments