புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா நாட்டாணிபுரசக்குடி ஊராட்சிக்குட்பட்ட மீமிசல் அருகே உள்ள கோபாலப்பட்டிணம் காட்டுக்குளம் அருகே RKR பொது சேவை மையம் நாளை ஏப்ரல் 22 புதன்கிழமை திறக்கப்பட உள்ளது.
இதன் சிறப்பம்சமாக, அவசரத் தேவைகளுக்காகப் பணம் எடுக்க இனி பொதுமக்கள் மீமிசல் பகுதிக்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை. இம்மையத்திலேயே மினி ஏடிஎம் (Mini ATM) வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் தங்கள் வங்கிச் சேமிப்புக் கணக்கிலிருந்து எளிதாகப் பணம் பெற்றுக் கொள்ளலாம்.
வழங்கப்படும் இதர சேவைகள்:
பணம் எடுக்கும் வசதி மட்டுமின்றி, பல்வேறு அரசு மற்றும் பொதுச் சேவைகளும் ஒரே இடத்தில் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அரசு ஆவணங்கள்: ஆதார் கார்டு சேவைகள், குடும்ப அட்டை, வருமானச் சான்றிதழ், பட்டா/சிட்டா மற்றும் வாரிசு சான்றிதழ்.
பதிவு சேவைகள்: பாஸ்போர்ட் விண்ணப்பித்தல், பான் கார்டு, வேலைவாய்ப்பு பதிவு மற்றும் திருமண உதவித் தொகை விண்ணப்பம்.
கட்டணங்கள்: மின்சாரக் கட்டணம் செலுத்துதல் மற்றும் எல்.ஐ.சி (LIC) பிரீமியம் செலுத்துதல்.
பயண முன்பதிவு: ரயில் மற்றும் விமான டிக்கெட் முன்பதிவு.
இதர சேவைகள்: வாகன இன்சூரன்ஸ், பயிர் காப்பீடு, ஜெராக்ஸ் மற்றும் லேமினேஷன்.
பொது சேவை மையத்தை பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகறது.
தொடர்பு கொள்ள:
RKR பொது சேவை மையம்
செல்: 96776 98709
மின்னஞ்சல்: rkresevai2223@gmail.com
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia

0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.