புதுக்கோட்டையில் இன்று மாலை 6 மணி முதல் அரசியல் கட்சிகள் பிரசாரம் செய்ய தடை கலெக்டர் உத்தரவு



புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 6 மணி முதல் அரசியல் கட்சிகள் பிரசாரம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது என்று கலெக்டர் உத்தரவிட்டுள்ார்.

பொதுக்கூட்டங்கள்- பிரசாரம்

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) நடக்கிறது. அன்று காலை 7 முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு, இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 6 மணி முதல் வாக்குப்பதிவு நிறைவடையும் வரை, மக்கள் பிரதிநிதித்துவ சட்டம், 1951 இன் பிரிவு 126-இன் கீழ் பின்வரும் கட்டுப்பாடுகள் கடைப்பிடிக்கப்பட வேண்டும்.

அதன்படி பொதுக் கூட்டங்கள் மற்றும் பிரசாரங்களுக்கு தடை விதிக்கப்படுகிறது. மின்னணு ஊடகங்கள் மூலம் தேர்தல் பிரசாரம் செய்ய இயலாது. இசை நாடக நிகழ்ச்சிகள் நடத்த கூடாது. வெளியூரிலிருந்து அரசியல் கட்சி பணிக்காக வந்துள்ள நபர்கள் இன்று மாலை 6 மணிக்குள் வெளியேற வேண்டும். தங்கும் இடங்களில் சோதனைகள் மேற்கொள்ளப்படும்.

100 மீட்டர் தூரத்தில்

வாகனங்களுக்கு வழங்கப்பட்ட அனுமதிகள் செல்லத்தகாததாகி விடும். வாக்குப்பதிவு நாளில் ஒவ்வொரு வேட்பாளருக்கும் 3 வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்படும். மேற்கண்ட வாகனங்களில் வாக்காளர்களை ஏற்றிச் செல்லுதல் குற்றமாகும். தற்காலிக கட்சி அலுவலகங்கள் வாக்குச்சாவடி மையத்தில் இருந்து 100 மீட்டர் தூரத்தில் அமைக்கப்பட வேண்டும்.

இதில் அதிகபட்சம் 2 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர். குற்றப்பின்னணி உள்ளவர்களுக்கு அனுமதி இல்லை. மேற்கண்ட விதிமுறைகள் கடுமையாக அமல்படுத்தப்படும். பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் ஒத்துழைக்க வேண்டுமென கேட்டுக்கொள்ளப்படுகிறது. இந்த தகவலை புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments