செவ்வாய் கிரகத்திற்கு நாசா அனுப்பும் விண்கலத்தில் தொண்டியை சேர்ந்த இரு மாணவர்கள் பெயர்களை பதிவு செய்துள்ளனர்.செவ்வாய் கிரகத்திற்கு மார்ஸ் 2020 ரோவர் விண்கலத்தை அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா அடுத்த ஆண்டு ஜூலையில் செலுத்த உள்ளது. 2021 பிப்.,ல் இது செவ்வாயில் தரையிறங்கும். இந்த விண்கலத்தில் தங்கள் பெயர்களை இலவசமாக பொறிப்பதற்கான வாய்ப்பை நாசா வழங்கியிருந்தது.

இதில் பல்வேறு நாடுகளிலிருந்து ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், தொண்டி அருகே கூத்தன்வயல் கிராமத்தை சேர்ந்த பாலமுருகன் மகன்கள் நில நவசிகன் 13, திகர் பூவன் 11, ஆகிய இருவரும் நாசா விண்கலம் ரோவரில் தங்களது பெயர்களை பதிவு செய்துள்ளனர். தனியார் பள்ளியில் நில நவசிகன் 9 ம் வகுப்பும், திகர் பூவன் 7 ம் வகுப்பும் படிக்கின்றனர்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments