கோபாலப்பட்டிணம் GPM மக்கள் மேடையின் ஆம்புலன்ஸ் அர்பணிப்பு விழா..



புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் தாலுகா, மீமிசல் அருகாமையில் உள்ள கோபாலப்பட்டிணத்தில் GPM மக்கள் மேடை கல்வி மற்றும் சமூக அறக்கட்டளை சார்பாக பொதுமக்கள் பயன்பாட்டிற்காக அவசர கால ஊர்தி ஆம்புலன்ஸ் (AMBULANCE) அர்ப்பணிப்பு விழா நிகழ்ச்சி நேற்றைய தினம் 19.10.2019 சனிக்கிழமை சிறப்பாக நடைபெற்றது.

இவ்விழாவின் முதல் நிகழ்வாக முஹம்மது ஹுசைன் அவர்களால் கிராத் ஓதப்பட்டு பிறகு தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டு விழா ஆம்பிக்கப்பட்டது. இவ் விழாவுக்கு ஹாஜி. M.பாவா மரைக்காயர் (President, GPM மக்கள் மேடை கல்வி மற்றும் சமூக அறக்கட்டளை) அவர்கள் தலைமை வகித்தார். GPM மக்கள் மேடை உறுப்பினர்கள் மற்றும் கோபாலபட்டிணம் ஜமாத்தார்கள் முன்னிலை வகித்தனர். GPM மக்கள் மேடை ஆலோசனை குழு உறுப்பினர் M.முகம்மது மீராசா அவர்கள் வரவேற்றார்.


சிறப்பு விருந்தினர் இராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு க.நவாஸ் கனி அவர்களுக்கு GPM மக்கள் மேடை கல்வி மற்றும் சமூக அறக்கட்டளை டிரஸ்ட் தலைவர் ஹாஜி. M.பாவா மரைக்காயர் அவர்களால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டு அதனைத் தொடர்ந்து நமதூருக்கு தேவையான சில அத்தியாவசியமான மற்றும் அவசியமான நலத்திட்டங்களை செய்து தரக்கோரி மனு ஒன்றும் அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து GPM மக்கள் மேடை இதுவரை செய்து முடித்த திட்டங்கள் மற்றும் தொடர்ந்து செய்து வருகிற திட்டங்கள் பற்றிய காணொளி ஒளிபரப்பப்பட்டது.

இதனை தொடர்ந்து ரபீக் B.Com., LLB.,(GPM மக்கள் மேடை சட்ட ஆலோசகர்), அரசநகரிப்பட்டிணம் வளர்பிறை மன்றத்தின் ஊழியர் ஜனாப் அஹமது மதனி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

இதில் சிறப்பு அழைப்பாளர்களாக திரு. பாஸ்கர் (காவல் ஆய்வாளர், மீமிசல்) அவர்கள் கலந்து கொண்டார்.

இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு க.நவாஸ் கனி அவர்கள் சிறப்புரையாற்றினார். அதனைத்தொடர்ந்து GPM மக்கள் மேடை கல்வி மற்றும் சமூக அறக்கட்டளை சார்பாக பொதுமக்கள் பயன்பாட்டிற்காக அவசர கால ஊர்தி ஆம்புலன்ஸ் சேவையை மாண்புமிகு க.நவாஸ் கனி அவர்கள் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.

இறுதியாக ஹாஜி. S. முகம்மது யூசுப் அவர்கள் நன்றியுரை நிகழ்தினார். இந்நிகழ்ச்சியை சா.முகம்மது இப்ராஹிம் BSc., (GPM மக்கள் மேடை முன்னாள் ஆலோசனை குழு உறுப்பினர்) அவர்கள் தொகுத்து வழங்கினார்.

கோபாலப்பட்டிணம் மற்றும் சுற்றுவட்டார  பகுதி பொதுமக்கள், GPM மக்கள் மேடை உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். இவ்விழாவை காண பெண்களுக்கு தனி இட வசதி செய்யப்பட்டிருந்தது.

இறுதி நிகழ்வாக இந்த விழாவில் கலந்து கொண்ட பொதுமக்கள் அனைவருக்கும் GPM மக்கள் மேடை சார்பாக இலவசமாக மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

மரம் வளர்ப்பு பற்றி  நபி மொழி

முஸ்லிம் ஒருவர் ஒரு மரத்தை நட்டு அல்லது விதைவிதைத்து விவசாயம் செய்து, அதிலிருந்து (அதன் விளைச்சலை அல்லது காய்கனிகளை) ஒரு பறவையோ, ஒரு மனிதனோ அல்லது ஒரு பிராணியோ உண்டால் அதன் காரணத்தால் ஒரு தர்மம் செய்ததற்கான பிரதிபலன் அவருக்குக் கிடைக்கும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி : 2320, அனஸ் இப்னு மாலிக் (ரலி).

ஆம்புலன்ஸ் சேவை தொடங்கியது குறித்து GPM மக்கள் மேடை ஆலோசனை குழு நம்மிடம் கூறுகையில்...

இந்த விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்த அனைவருக்கும் நன்றி. மீமிசல் கிழக்கு கடற்கரை சாலையில் (ECR) அடிக்கடி நிகழும் வாகன விபத்துகளில் ஏற்படும் உயிர் இழப்புகளை தவிர்க்கும் பொருட்டு, சாதி மத இன பேதமின்றி அனைத்து சமுதாயத்தவர்களும் ஆம்புலன்ஸ் சேவையை பயன்படுத்தும் நோக்கில் ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு செய்யப்பட்டுள்ளது. நோக்கம் நிறைவேற நன்கொடைகளை வாரி வழங்கிய GPM மக்கள் மேடை உறுப்பினர்கள் மற்றும் நமதூரை சேர்ந்த நல்லுள்ளங்கள் அனைவருக்கும் GPM மக்கள் மேடை சார்பில் நன்றியை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம். மேலும் இந்த ஆம்புலன்ஸ் சேவையை அனைத்து சமுதாய பொதுமக்களும் பயன்படுத்திக்கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்' என்றனர்.

மாண்புமிகு நவாஸ் கனி அவர்களிடம் GPM மக்கள் மேடை சார்பாக வழங்கப்பட்ட மனுவில் குறிப்பிட பட்ட திட்டங்கள் பற்றிய விபரம்:

1.இணைப்பு சாலை அமைத்து தரவேண்டி கிழக்கு கடற்கரை சாலை விரகாளியம்மன் கோவில் அருகில் உள்ள கோபாலப்பட்டிணத்தின் நுழைவாயில் வழியாக GPM மக்கள் மேடை குடிநீர் ஆலை, அவுலியா நகர், பெரியபள்ளிவாசல், GPM மக்கள் மேடை அலுவலகம்,  ஆலமரம் ஈத்கா மைதானம் மற்றும் அரண்மனை தோப்பு வழியாக மீமிசல் செல்லக்கூடிய சாலை அமைத்து தர வேண்டி.
2.துணை சுகாதார நிலையம் அமைத்து தர வேண்டி.
3.கோபாலப்பட்டிணம் கல்லுக்குளத்தை சுற்றி நடைபாதை அமைத்து தர வேண்டி.
4.கோபாலப்பட்டிணம் பொது அடக்க மைதானத்தில் உயர் கோபுர மின்விளக்கு அமைத்து தரவேண்டி.
5.கோபாலப்பட்டிணத்தை தனி ஊராட்சியாக அமைத்திட வலியுறுத்த வேண்டி.
6.அரசு நியாயவிலைக்கடைக்கு சொந்த கட்டிடம் அமைத்து தர வேண்டி.
7.கிழக்கு கடற்கரை சாலையில் கோபாலப்பட்டிணம் பேருந்து நிறுத்துமிடத்தில் பயணிகள் அமரக்கூடிய வகையில் நிழற்குடை அமைத்து தர வேண்டி .

குறிப்பு : - இந்நிகழ்ச்சியை GPM MEDIA மூலமாக முகநூல் பக்கத்தில் நேரலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.













கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments