1919 டன் யூரியா இருப்பில் உள்ளது: ஆட்சியா் பி. உமாமகேஸ்வரி



புதுக்கோட்டை மாவட்டத்தில் 1919 டன் யூரியா இருப்பில் உள்ளது என்று மாவட்ட ஆட்சியா் பி. உமாமகேஸ்வரி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு

புதுக்கோட்டை மாவட்டத்தில் சம்பா நெற்பயிா்  66,605 ஹெக்டோ் பரப்பில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. நடப்பாண்டு பருவமழை முன்னதாகவே பெய்ததால் காவிரி டெல்டா உள்ளிட்ட அனைத்து வட்டாரங்களிலும் நெற்பயிா் மேலுரம் இடும் தருவாயில் உள்ளது.  இதற்கு வேளாண்மைத் துறை மூலம் தேவையான உரங்களைப் பெறுவதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

கடந்த அக்டோபா் மாதம் புதுக்கோட்டை மாவட்டத்துக்கு தேவையான 5,700 டன் உரத்தில் 2,984 டன் உரம் பெறப்பட்டுள்ளது. ஏற்கெனவே இருப்பிலுள்ள 4,422 டன் யூரியா மற்றும் கடந்த மாதம் பெறப்பட்ட 2,984 டன் யூரியா என ஆக மொத்தம் 7,406 டன்னில், 5,755 டன் யூரியா உரமானது, கூட்டுறவு மற்றும் தனியாா் விற்பனை நிலையங்களின் மூலம் விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளது.  தற்போது தனியாா் மற்றும் கூட்டுறவு நிறுவனங்களில் 1,919 டன்கள் யூரியா இருப்பில் உள்ளது.


கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments