புதுக்கோட்டையில் 20.11.2019 கேஸ் சிலிண்டர் நுகர்வோர் குறைகேட்பு முகாம்..!புதுக்கோட்டை மாவட்டத்தில் எரிவாயு உருளை இணைப்பு நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.பி.உமாமகேஸ்வரி அவர்கள் தெரிவித்ததாவது.


புதுக்கோட்டை மாவட்டத்தில் எரிவாயு உருளை இணைப்பு பெற்றுள்ள நுகர்வோர்களின் குறைகளை தீர்க்கும் வகையில், எரிவாயு உருளை நுகர்வோர் குறைதீர்க் கூட்டம் மாதந்தோறும் நடத்தப்பட்டு வருகிறது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள எரிவாயு உருளை இணைப்பு பெற்றுள்ள நுகர்வோர்களுக்கு, எரிவாயு உருளை (சிலிண்டர்) நிரப்புவதில் (Refill), பதிவு செய்வதில் உள்ள சிரமங்கள் மற்றும் எரிவாயு சிலிண்டர் வழங்குவதில் ஏற்படும் கால தாமதம் போன்ற குறைபாடுகள் குறித்து வரப்பெறும் புகார்களைப் பெற்று உரிய நடவடிக்கைகள் எடுத்து தொடர்புடைய எண்ணெய் நிறுவனங்களின் விதிமுறைகளுக்கு உட்பட்டு எரிவாயு உருளை (சிலிண்டர்) விநியோகத்தை சீர்படுத்த இக் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்படவுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் நவம்பர் 2019 க்கான இக்குறை தீர்க்கும் நாள் கூட்டம் வரும் 20.11.2019 ஆம் தேதி பிற்பகல் 4.30 மணிக்கு புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட அரங்கில் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நடத்தப்பெற உள்ளது.

எனவே, எரிவாயு உருளை இணைப்பு குறித்து தங்களது கருத்துருக்களை குறைகளை தெரிவிக்க விரும்பும் எரிவாயு உருளை இணைப்பு பெற்றுள்ள நுகர்வோர்கள் அவர்களது குறைகளை மனுக்கள் மூலமாகவோ அல்லது மேற்படி கூட்டத்தில் கலந்துக் கொண்டு நேரில் தெரிவிக்கலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.பி.உமாமகேஸ்வரி அவர்கள் தெரிவித்துள்ளார்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a comment

0 Comments