வளைகுடா நாடுகளில் கடந்த 5 ஆண்டுகளில் 34 ஆயிரம் இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர் அதிர்ச்சி தகவல்



வளைகுடா நாடுகளில் கடந்த 5 ஆண்டுகளில் 34 ஆயிரம் இந்தியர்கள் உயிரிழந்திருப்பதாக வெளியுறவுத்துறை அதிர்ச்சி புள்ளிவிவரத்தை வெளியிட்டுள்ளது.

குவைத், சவூதி அரேபியா, பஹ்ரைன், கத்தார், ஓமன், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய 6 நாடுகளில் நாள்தோறும் சராசரியாக 15 இந்தியர்கள் உயிரிழப்பதாகவும் மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் முரளீதரன் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்துள்ள அவர் வளைகுடா நாடுகளில் 2014ஆம் ஆண்டு முதல் 33,988 இந்தியர்கள் உயிரிழந்திருப்பதாகவும் இந்த ஆண்டில் மட்டும் 4 ஆயிரத்து 823 பேர் உயிரிழந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார். 

2014-ஆம் ஆண்டில் 5388 பேரும், 2015-ல் 5786 பேரும், 2016 ஆம் ஆண்டில் 6013 பேரும், 2017 ஆம் ஆண்டில் 5604 பேரும், 2018-ஆம் ஆண்டில் 6014 பேரும் உயிரிழந்து உள்ளனர்.

சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய இருநாடுகளில்தான் அதிக அளவில் உயிரிழப்புகள் நேரிட்டுள்ளது. வளைகுடா நாடுகளில் உயிரிழக்கும் இந்தியர்களில் அதிகபட்சமாக கடந்த ஐந்து ஆண்டுகளில் தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த 1200 பேர் உயிரிழந்துள்ளனர்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments