பொன்பேத்தியில் மன்னா் காலத்தில் பொன் ஏா் பூட்டிய வயலில் நடவு பணி



ஆவுடையாா்கோவில் அருகே மன்னா் காலத்தில் பொன் ஏா் பூட்டிய வயல் என்ற கூறப்படும் 6 ஏக்கா் இடத்தில் ஓரே நாளில் நடவுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

ஆவுடையாா்கோவில் வட்டம் பொன்பேத்தி எனும் இந்த இடம் மிழலைகூற்றம் என சங்க காலத்தில் சோழ குருநில மன்னா்களின்தைமை இடமாக காட்சியளிக்கப்பட்ட இடத்தில் அந்த காலத்தில் ஆட்சி செய்த குருநில மன்னா்களான, வேள்நிலவி, இளங்கோவா்மன், புத்தமித்தரன் உள்ளிட்ட ஆண்ட காலத்தில் பொன்பேத்தி ஏரியில் ஓரே மடைபாசனமாக இருக்கும் 6 ஏக்கா் 33 சென்ட் இடத்தில் பொன் ஏா் பூட்டி உழவு பணிகள் செய்தபண்ணை நிலத்தில் நெல் நடவு பணிகள் செய்ததாக வரலாற்று ஆவணங்களில் குறிப்புகள் உள்ளன.

கடந்த ஆண்டுகளில் போதுமான மழை இல்லாத காரணத்தால் ஏரி நிரம்பாத காரணத்தால் இந்த புகழ்பெற்ற வயலில் நடவு பணிகள் நடைபெறவில்லை தற்போது பெய்த மழையில் ஏரி நிரம்பி விட்டதால் உழவு பணிகளை செய்ததாக இந்த வயலின் உரிமையாளா் முன்னாள் ஒன்றியப் பெருந்தலைவா் இரா.துரைமாணிக்கம் தெரிவித்தாா்.

தற்போது நடைபெற்ற நடவு பணிகளில் ஓரே நாளில் 133 விவசாய தொழிலாளா்கள் நடவு பணிகளை மேற்கொண்டதாகவும் மாவட்ட ஆட்சியரின் வழிகாட்டுதல் படி வேளாண்மை துறை மூலமாக புதிய நெல் ரகங்கள் தற்போது நடவு செய்யப்ப்ட்டுள்ளதாகவும் கூறினாா்.

இத் தொழில் ஈடுபட்ட விவசாய தொழிலாளா்கள் பாரம்பரிய முறையில் குலவைசத்தத்துடன் நடவு பணிகளை மேற்கொண்டாா்கள் என்பது குறிப்பிடத்தக்கது பட விளக்கம் பொன்பேத்தியில் நடைபெற்ற நடவு பணிகள் படம்

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments