நடுவானில் தவறான அலாரம்: குவைத்துக்கு புறப்பட்ட விமானம் மீண்டும் சென்னைக்கே திரும்பியது



சென்னையிலிருந்து இன்று அதிகாலை 160 பயணிகளுடன் குவைத் புறப்பட்டு சென்ற இண்டிகோ விமானம் நடுவானில் தவறான அலாரம் ஒலித்ததன் காரணமாக விமானிகள் 'நடுவான் நெருக்கடி'யை அறிவித்தனர்.

இதனையடுத்து குவைத் விமானம் சென்னை விமான நிலையத்திற்கு மீண்டும் திரும்பியது.

இதுகுறித்து விமானத்தின் செய்தித் தொடர்பாளர் கூறியதாவது:

சென்னை விமான நிலையத்திலிருந்து இண்டிகோ ஏ 320 இயக்கும் 'சென்னை-குவைத் 6 இ -1751' விமானம் இன்று அதிகாலை 1.30 மணியளவில் புறப்பட்டுச் சென்றது.

புறப்பட்ட 15 நிமிடங்களில் தீ விபத்து எச்சரிக்கையை அறிவிக்கும் அலாரம் ஒலிப்பதை விமானிகள் கண்டுபிடித்தனர். உடனடியாக எமர்ஜென்ஸி அறிவிப்பு எண்.7700 ஐ அனைத்து விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கும் அனுப்பினர்.

இதைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கையாக, விமானம் மீண்டும் சென்னை விமான நிலையம் வந்தடைந்தது. சென்னையில் தரையிறங்கிய விமானத்தில் ஆய்வு செய்யப்பட்ட பிறகு அலாரம் தவறானது என்பது உறுதி செய்யப்பட்டது.

இவ்வாறு இண்டிகோ விமான செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments