கோபாலப்பட்டிணம் நெடுங்குளம் பகுதியில் ஊராட்சி மன்றம் சார்பாக சீமைக்கருவேல மரங்கள் அகற்றம்..!புதுக்கோட்டை மாவட்டம், நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி கோபாலப்பட்டிணத்தில் ஊராட்சி மன்றம் சார்பா நேற்று 21.11.2019 வியாழக்கிழமை அன்று சீமை கருவேல மரம் அகற்றப்பட்டது.
கோபாலப்பட்டிணம் நெடுங்குளம் பெண்கள் குளிக்கும் பகுதிக்கு செல்லும் வழியில் சீமை கருவேல மரங்கள் சாலையை ஆக்கிரமித்திருந்த நிலையில் இது சம்மந்தமாக ஊர் ஜமாத் நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி தனி அலுவலரிடம் சீமை கருவேல மரங்கள் அகற்றப்பட வேண்டி கோரிக்கை  விடுக்கப்பட்டது.

அதனடிப்படையில் நேற்றைய தினம் நெடுங்குளம் பெண்கள் குளிக்க செல்லும் சாலை, நெடுங்குளம் ஆண்கள் படித்துறை பகுதி மற்றும் GPM மக்கள் மேடை பொதுக் கழிப்பிடம் பகுதி ஆகிய இடங்களில் காடு போல் வளர்ந்திருந்த சீமை கருவேல மரங்களை நேற்று காலை முதல் இரவு வரை  ஊர் ஜமாத் தலைவர் மற்றும் ஜமாத்தார்கள் முன்னிலையில் JCB மூலம் ஊராட்சி நிர்வாகம் சார்பாக அகற்றப்பட்டது.

கோரிக்கையை ஏற்று நடவடிக்கை எடுத்த ஊராட்சி நிர்வாகத்திற்கும், காலை முதல் இரவு வரை மேற்பார்வையில் ஈடுபட்ட கோபாலப்பட்டிணம் ஜமாத்தார்களுக்கும் GPM MEDIA சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a comment

0 Comments