கோபாலப்பட்டிணத்தில் இருள் சூழ்ந்து காணப்படும் மக்கா 4-வது வீதி..!புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார் கோவில் ஒன்றியம், நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி, மீமிசல் அருகில் உள்ள கோபாலப்பட்டிணத்தில் கடற்கரை ஈத்கா மைதானத்திலிருந்து மக்கா 4-வது வீதி (மர்ஹூம். ஊனாசெனா அப்பா, ஜனாப்.NMA. இக்பால் அவர்கள் வசிக்கும் தெரு) செல்லும் சாலையில் உள்ள  தெருவிளக்குகள் எரியாததால், அந்த சாலை இருளில் மூழ்கியுள்ளது.

ஆலமரம் ஈத்கா மைதானம் முதல் மக்கா 4 வது வீதி  வரை மூன்று மின்கம்பங்கள் உள்ளது. இதில் கடந்த சில மாதங்களாக தெரு முழுவதுமாக தெரு விளக்குகள் எரியவில்லை.

எனவே பெரியவர்கள், சிறியவர்கள் மற்றும் வயதானவர்கள் பள்ளிவாசல்களில் இரவு நேர தொழுகையை முடித்துவிட்டு வீடுகளுக்கு செல்லக்கூடியவர்கள் மற்றும் பள்ளிகூடங்கள், மதரஸாக்களில் டியூசன் முடித்து விட்டும் வரும் மாணவ, மாணவிகள் அந்த பகுதியில் நடந்து செல்வதற்கு சிரமப்பட்டு வருகின்றனர்.

மேலும் மழை காலமாக இருப்பதால் இரவு நேரங்களில் விஷ ஜந்துக்கள் சாலைகளில் ஊர்ந்து செல்கின்றன.

இதனால் தெருவில் நடந்து செல்லும் பொது மக்கள் மற்றும் குழந்தைகள், பள்ளி மாணவர்கள், அச்சத்துடன் செல்கின்றனர்.

எனவே ஊராட்சி நிர்வாகம் கோபாலப்பட்டிணம் மக்கா 4-வது வீதியில் எரியாத தெருவிளக்குகளை உடனடியாக சரி செய்து தரும்படி அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மின்னல் வந்த போது எடுக்கப்பட்ட புகைப்படம் தகவல்: மீரான் கனி (தெருவாசி), மக்கா 4-வது வீதி,கோபாலப்பட்டிணம்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a comment

0 Comments