கோபாலாப்பட்டிணம் அவுலியா நகர் கடற்கரையில் வலை பின்னும் கூடம் கட்டுமானப்பணி ஆரம்பம்..!கோபாலப்பட்டிணம் அவுலியா நகர் கடற்கரை பகுதியில் வலை பின்னும் கூடம் கட்டுமான பணி துவங்கப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் தாலுகா, நாட்டாணிபுரசக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட கோபாலப்பட்டிணம் அவுலியா நகர் பகுதியில் இருந்து சுமார் 50- க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு சென்று மீன் பிடித்து வருகின்றனர். அவுலியா நகர் பகுதி மீனவர்கள் ஒன்றிணைந்து அந்த பகுதியில் சிறு ஓட்டு கொட்டைகை அமைத்து அதில் வைத்து வலை பின்னுவது மற்றும் தூண்டில் அடுக்குவது போன்ற பணிகளை செய்து வந்தனர்.


  இதனிடையே சுனாமி மறுவாழ்வு திட்டத்தின் மூலம் மத்திய அரசு மற்றும் தனியார் நிறுவனமும் இணைந்து புதிய வலை பின்னும் கூடம் அவுலியா நகர் கடற்கரை பகுதியில் நேற்று 25.11.2019 திங்கள்கிழமை அன்று கட்டுமான பணி ஆரம்பிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கோபாலப்பட்டிணம் ஜமாத் துணைத்தலைவர், நிர்வாகிகள், மீனவர் சங்கத் தலைவர் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments