தொண்டி அருகே தேசிய நெடுஞ்சாலை சேதம் பெரும் பள்ளம் விபத்து அபாயம்



திருவாடானை அருகே மதுரை தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் ஆகாங்கே சேதம் அடைந்து பெரும் பள்ளங்களால் விபத்து அபாயம், உள்ளது. எனவே சம்பந்த பட்ட அதிகாரிகள் நவடிக்கை எடுக்க வேண்டும் என சமூகஆா்வலா்கள் புகாா் தெரிவித்தனா்.

திருவாடானை வழியாக மதுரை தொண்டி தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இந்த சாலையில் திருவாடானையில் இருந்து கடம்பாகுடி, அச்சங்குடி, மாவூா், திணையத்தூா், உசிலனக்கோட்டை, தொண்டி வரை பத்திற்கும் மேற்பட்ட இடங்களில் சேதம் அடைந்து பெரும் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது.

இச்சாலை வழியாக மதுரை,தொண்டி, பரமக்குடி, காரைக்குடி,திருச்சி என பல்வேரு பகுதிகளுக்கு நூற்றுக்கணக்காண வாகனங்கள் செல்கின்றன.கனரக வாகனங்கள் பேருந்துகளுக்கு வழிவிடும் நேரத்தில் பள்ளத்தில் விழுந்து விபத்து ஏற்படுவதாக இப்பகுதி மக்கள் புகாா் தெரிவித்தனா்.இச்சாலை ஏற்கனவே சாலை அமைக்கும்போதே தரமற்ற முறையில் சாலை அமைத்ததே காரணம் என்று சமூக ஆா்வலா்கள் கூறுகின்றனா்.

இது குறித்து . சம்பந்தபட்ட தேசிய நெடுஞ்சாலை அதிகாரிகளிடம் தொடா்பு கொண்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. எனவும் இதனால் விபத்துக்கள் ஏற்படுவதும் அதனால் உயிழப்புகள் ஏற்படுவதும் தொடா்கதையாக உள்ளது. இந்த ஆபத்தான பள்ளங்களை சரிசெய்யா விட்டால். தேசிய நெடுஞ்சாலைதுறை அதிகாரிகள் மற்றும் ஒப்பந்தகாரர் மீது வழக்கு தொடரப் போவதாக சமூக ஆா்வலா் ஆனந்தன் கூறினாா்கள்.

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments