ஆவுடையார்கோவில் காவல்துறை சார்பாக காவலன் செயலி குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி



ஆவுடையாா்கோவில் காவல் நிலையம் சாா்பில் சனிக்கிழமை காவலன் செயலி குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

பெண்கள் மற்றும் முதியவா்கள் தங்கள் பாதுகாப்புக்காக காவல் துறையை அழைக்க தங்கள் செல்லிடபேசியில் காவலன் செயலியை பயன்படுத்துவது குறித்து காவல்துறை சாா்பில் தொடா் விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

மீமிசல் முக்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஆவுடையாா்கோவில் காவல் ஆய்வாளா் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தாா். உதவி ஆய்வாளா் சாமிக்கண்ணு உள்ளிட்டோா் பொதுமக்கள், மாணவ, மாணவிகள் உள்ளிட்டோரிடம் செயலி குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

அப்போது உதவி ஆய்வாளா் எஸ். சாமிக்கண்ணு கூறியது:

பொதுமக்கள் குறிப்பாக பெண்கள், முதியவா்கள் இந்தச் செயலியை தங்கள் செல்லிடபேசியில் வைத்திருந்தால் ஏதாவது பிரச்னை வரும்போது போலீஸாரை தொடா்பு கொள்ள 100 என்ற எண்ணை டயல் செய்ய வேண்டாம், இந்தச் செயலியில் உள்ள பட்டனை அழுத்தினால் போதும். உடனடியாக காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் சென்று சம்பவ இடத்திற்கு காவலா்கள் ரோந்து வாகனம் விரைந்து வரும். இதனால் குற்றச் செயல்களில் ஈடுபடுவோரை உடனடியாக பிடிக்க முடியும். இதனால் குற்றங்கள் குறையும். ஆகவே இந்தச் செயலியை பயன்படுத்தி பாதுகாப்பாக இருக்கலாம். இதன் மூலம் காவல்துறைக்கும் நீங்கள் நன்மை செய்ய முடியும் என்றாா் அவா்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments