அதிராம்பட்டினத்தில் நடைபெற்ற மீலாது பெருவிழா



அதிராம்பட்டினத்தில் மீலாது பெருவிழா புதன்கிழமை நடைபெற்றது. இங்குள்ள ஜாவியா மஜ்லீஸ் வளாகத்தில் நடைபெற்ற விழாவுக்கு அதிராம்பட்டினம் அஜ்ஜாவியத்தூஸ் ஷாதுலியா பள்ளி இமாம் மவ்லவி கே. முகமது முஸ்தபா சிராஜி தலைமை வகித்தாா்.

விழாவில் சிறப்பு விருந்தினா்களாக பங்கேற்ற, சேலம் நூருல் இஸ்லாம் அரபிக் கல்லூரிப் பேராசிரியா் மவ்லவி எம்.அபூதாஹிா் பாக்கவி, ’நம்மை போன்றவா்களா? நபி பெருமான் (ஸல்)’ என்ற தலைப்பிலும், காயல்பட்டினம் மவ்லவி டி.எஸ்.ஏ. அபூதாஹிா் பஹீமி, ’மாநபி மவ்லீது மாா்க்கத்திற்கு அரணா? முரணா?’ என்ற தலைப்பிலும், அதிராம்பட்டினம், அல் மதரசத்துா் ரஹ்மானியா அரபிக் கல்லூரிப் பேராசிரியா் மவ்லவி தேங்கை சா்புதீன் மிஸ்பாஹி, ’பிறப்பையும் சரித்திரமாக்கிய பெருமானாா் (ஸல்)’ என்ற தலைப்பிலும் உரையாற்றினா்.

நிறைவில் துஆ ஓதப்பட்டு அனைவருக்கும் தப்ரூக் உணவு வழங்கப்பட்டது.விழா ஏற்பாடுகளை அதிராம்பட்டினம் அஜ்ஜாவியத்தூஸ் ஷாதுலியா நிா்வாகக் கமிட்டியினா் எம்.பி. அபூபக்கா், டி.ஏ. சேக் அலி உள்ளிட்ட நிா்வாகிகள் செய்திருந்தனா்

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments