நம் வாக்குரிமையை உறுதி செய்திடுவோம் விழிப்புணர்வுடன் செயல்படுவோம்! நமது ஜனநாயகத்தை வலுப்படுத்துவோம்!!






உங்களது பெயர் 2003 வாக்காளர் பட்டியலில் இருந்தால் நீங்கள் வேறு எந்த ஆதாரமும் அளிக்க வேண்டியதில்லை. உங்களது Enumeration Forms அப்படியே ஏற்றுக் கொள்ளப்படும்.
ஒருவேளை உங்களது பெயர் 2003 வாக்காளர் பட்டியலில் இல்லை என்றால் உங்களது தாயார் அல்லது தந்தையாரின் பெயர் அந்த பட்டியலில் இருந்தால் நீங்கள் வேறு எந்த ஆதாரமும் அளிக்க வேண்டியதில்லை. உங்களது Enumeration Forms அப்படியே ஏற்றுக் கொள்ளப்படும்.


உங்கள் பெயரோ அல்லது உங்கள் பெற்றோர்களின் பெயரோ வாக்காளர் பட்டியலில் இல்லை என்றால் மட்டுமே தேர்தல் ஆணைய அதிகாரிகள் கேட்கின்ற ஆவணங்களை நீங்கள் சமர்ப்பிக்க வேண்டும்.

தேர்தல் அதிகாரிகள் உங்கள் வீட்டிற்கு வரும் பொழுது உங்கள் வீட்டில் 18 வயது பூர்த்தியான நபர் இதுவரை பதிவு செய்யாமல் இருந்தால் உடனுக்குடன் பதிவு செய்யப்படும்.

ஆவணச் சான்றுகள்
வாக்குச்சாவடி அலுவலர்கள் வீடு தேடி வரும்போது. தேவையான ஆவணங்களை அவர்கள் கோரினால், பிறப்புச் சான்றிதழ், ஆதார் அட்டை (அடையாளமாக மட்டும்) பாஸ்போர்ட், கல்விச் சான்றுகள், வசிப்பிடச் சான்று, சாதிச் சான்று. அரசாங்கத்தால் வழங்கப்பட்ட நிலம் அல்லது வீட்டிற்கான ஒதுக்கீடு சான்றிதழ், உள்ளூர் அதிகாரிகளால் தயாரிக்கப்பட்ட குடும்பப் பதிவேடு, ஒன்றிய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அடையாள அட்டை, இந்திய அரசால் கொடுக்கப்பட்ட அடையாள அட்டை அல்லது சான்றிதழ் உள்ளிட்டவற்றில் ஏதேனும் ஒன்றை சமர்ப்பித்தால் போதும் இவை உங்கள் உரிமையை உறுதிப்படுத்தும்.

வாக்குரிமையை உறுதிசெய்வோம்!
ஆகவே, வாக்குரிமை ஒவ்வொரு குடிமகனுக்கும் மிக மிக முக்கியமானது என்பதால், தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கையின் மூலம் பொதுமக்கள் தங்கள் வாக்குரிமையை உறுதி செய்துகொள்ள வேண்டும். இந்த நடவடிக்கையில் கவனம் சிதறாமல், குடும்பத்தில் உள்ள அனைவரின் வாக்குரிமையை உறுதி செய்ய தேவையான முன்தயாரிப்புகளை அனைவரும் மேற்கொள்ள வேண்டும். திருத்தப்பட்ட பட்டியலில் தங்களது பெயர் உள்ளதா என்பதைத் தவறாமல் உறுதி செய்துகொள்ள வேண்டும்.

இந்தத் திருத்தத்தில் சிறு தவறு கூட பெரும் இழப்பை ஏற்படுத்தலாம், எனவே முன்கூட்டியே தயாராகுங்கள்.

உங்கள் வாக்கு, நாட்டின் எதிர்காலத்தை வடிவமைக்கும் அதை யாருக்கும் விட்டுக்கொடுக்காதீர்கள்.

நமது ஜனநாயகத்தை வலுப்படுத்துவோம்!! விழிப்புணர்வுடன் செயல்படுவோம்!

அன்பார்ந்த வாக்காளப் பெருமக்களே,

நமது ஜனநாயகத்தின் அடித்தளமான வாக்குரிமை, ஒவ்வொரு குடிமகனின் கையில் உள்ள வலிமையான ஆயுதமாகும். அது வெறும் உரிமை மட்டுமல்ல, நமது குரலை அரசின் அரங்கில் எதிரொலிக்கச் செய்யும் சக்தி; சமூக மாற்றத்தை உருவாக்கும் திறவுகோல். உங்கள் ஒரு வாக்கு. கொள்கைகளை மாற்றலாம். தலைவர்களைத் தேர்ந்தெடுக்கலாம், அநீதிகளைத் தடுக்கலாம். ஆனால், இந்த உரிமை பறிபோகும் அபாயம் எப்போதும் இருக்கிறது என்பதையும் நாம் உணர்ந்துகொள்ள வேண்டும்.

வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தம்
வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தம் {Special Intensive Revision-SIR} என்கிற நடவடிக்கையை, பல்வேறு குளறுபடிகள் மற்றும் குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் தமிழ்நாட்டில் நவம்பர் 4-ஆம் தேதி முதல் தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. அதன்படி, நவம்பர் 4 முதல் டிசம்பர் 9 வரை வாக்காளர் பட்டியல் சரிபார்ப்புப் பணிகளும், டிசம்பர் 9 அன்று புதிய வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படவும் இந்தியத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

எச்சரிக்கை- விழிப்புணர்வு

இந்த நடவடிக்கை வாக்காளர் பட்டியலைத் தூய்மைப்படுத்துவதாகக் கூறப்பட்டாலும், பீகார் போன்ற மாநிலங்களில் லட்சக்கணக்கான உண்மையான வாக்காளர்கள் நீக்கப்பட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. மேலும், குடியுரிமைத் திருத்தச் சட்டத்துடன் {CAA} இணைத்து குடியுரிமையைச் சரிபார்க்கும் முறை பின்பற்றப்படுவதாகக் கூறி, நாடு முழுவதும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன. எனினும், எதிர்ப்புகளை மீறி, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் இந்தப் பணிகளைத் தேர்தல் ஆணையம் தொடர்கிறது. எனவே, நாம் விழிப்புடன் இருக்க வேண்டிய தருணம் இது. உங்கள் வாக்குரிமை, உங்கள் குடும்பத்தினரின் வாக்குரிமை பறிபோகாமல் பாதுகாக்க, குடும்பத்தில் அனைவரின் பெயர்களும் பட்டியலில் உள்ளனவா எனச் சரிபார்க்க வேண்டும்.

நாம் என்ன செய்ய வேண்டும்

தங்கள் வீட்டிற்கு வரும் வாக்குச்சாவடி அலுவலர்களால் {Booth Level Officers BLO} நமக்குத் தரப்படும் விண்ணப்பத்தில் (Enumeration Form) கேட்கப்படும் விவரங்களை கவனமாகப் பூர்த்தி செய்ய வேண்டும். பூர்த்தி செய்ய வேண்டிய தகவல்களைப் பெற https:/voters.eci.gov.in என்ற இணையதள முகவரியில் சென்று தகவல்கள் பெறலாம். இந்த விண்ணப்பத்தில் தகவல்களைப் பூர்த்தி செய்து கொடுக்கும்போது பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஓட்ட வேண்டும். ஆவணங்கள் எதுவும் சமர்ப்பிக்கத் தேவையில்லை. அந்தப் பூர்த்தி செய்த விண்ணப்பத்தின் நகலை நாம் வைத்துக்கொள்ள வேண்டும்.




எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments