புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் சூரிய சக்தியால் இயங்கும் உலர்ப்பான்களை அரசு மானிய உதவியுடன் பெற விண்ணப்பிக்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
கலெக்டர் உமா மகேஸ்வரி வெளியிட்டு உள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழக முதல்-அமைச்சரின் உத்தரவின்படி, புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகளுக்கு வேளாண்மை பொறியியல் துறை வாயிலாக தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் நிகழ்வாண்டில் சூரிய சக்தியால் இயங்கும் உலர்ப்பான்கள் அரசு மானிய உதவியுடன் புதுக்கோட்டை கோட்டத்திற்கு 4 எண்கள் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் அமைக்க ஒதுக்கீடு பெறப்பட்டு விவசாயிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
சூரிய சக்தியால் இயங்கும் உலர்ப்பான்கள் சுமார் 400 சதுர அடி முதல் 1000 சதுர அடி வரை 50 சதவீதம் முதல் 60 சதவீதம் வரை அரசு மானிய உதவியுடன் அமைக்கப்பட உள்ளது.
சிறு குறு, பெண் மற்றும் ஆதிதிராவிட விவசாயிகளுக்கு 60 சதவீதம் அல்லது ரூ.3 லட்சத்துக்கு 50 ஆயிரம் அதிகபட்ச மானியம், இதர விவசாயிகளுக்கு 50 சதவீதம் அல்லது ரூ.3 லட்சம் அதிகபட்ச மானியம் வழங்கப்படுகிறது. வேளாண் விளை பொருட்களை உலர்த்தி அதனை மதிப்புக்கூட்டும் பொருட்களாக மாற்றி கூடுதல் வருமானம் பெறும் வகையில் சூரிய மின்சக்தி உலர்ப்பான்கள் அமைக்க விரும்பும் விவசாயிகள், விவசாயிகள் விளைபொருள் குழுக்கள், சம்பந்தப்பட்ட உதவி செயற் பொறியாளர் வேளாண்மை பொறியியல் துறை அலுவலகங்களில் பதிவு செய்து பயன்பெறலாம்.
புதுக்கோட்டை, விராலிமலை, அன்னவாசல், குன்றாண்டார்கோவில், கறம்பக்குடி, கந்தர்வக்கோட்டை, திருவரங்குளம் ஆகிய ஒன்றியங்களை சேர்ந்த விவசாயிகள் புதுக்கோட்டை திருக்கோகர்ணத்தில் இயங்கும் வேளாண்மை பொறியியல் துறை உதவி செயற் பொறியாளர் அலுவலகம் மற்றும் அறந்தாங்கி, ஆவுடையார்கோவில், மணமேல்குடி, அரிமளம், திருமயம், பொன்னமராவதி ஆகிய ஒன்றியங்களை சேர்ந்த விவசாயிகள் அறந்தாங்கி ராஜேந்திரபுரத்தில் உள்ள வேளாண்மை பொறியியல் துறை உதவி செயற் பொறியாளர் அலுவலகத்தில் பதிவு செய்து சூரிய மின் சக்தி உலர்ப்பான்கள் அமைத்து பயன் பெறலாம்.
மேலும் விபரங்களுக்கு புதுக்கோட்டை வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளர் அலுவலக தொலைபேசி எண் 04322-221816 என்ற எண்ணிற்கும், சம்பந்தப்பட்ட உதவி செயற்பொறியாளர் புதுக்கோட்டை 95005 88125 என்ற எண்ணிற்கும், உதவி செயற்பொறியாளர் அறந்தாங்கி 90803 43110 என்ற எண்ணிற்கும் தொடர்பு கொள்ளலாம்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.