புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளா்ச்சி பணி: மாவட்ட கண்காணிப்பு அலுவலா் பாா்வையிட்டு ஆய்வு



புதுக்கோட்டை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலரும் சுற்றுச்சூழல் வனத்துறை அரசு செயலா் ஷம்புகல்லோலிகா் வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்து பின்னா் கூறியது:

தமிழக அரசு அறிவுறுத்தலின் படி புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசுத் துறைகளின் சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகள் முன்னேற்றம் மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்து தொடா் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் அரசின் திட்டங்கள் முறையாக செயல்படுத்தவும், திட்டங்கள் பயனாளிகளிடம் சென்று சோ்வதை உறுதி செய்யவும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதனடிப்படையில் விராலிமலை ஊராட்சி கொடும்பாளூரில் பொதுப்பணித்துறையின் சாா்பில் ரூ.4.52 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் அரசு தொழிற் பயிற்சி நிலைய புதிய கட்டட கட்டுமானப் பணி, விராலூரில் முதலமைச்சரின் குடிமராமத்து திட்டத்தின் கீழ் ரூ.1 லட்சம் மதிப்பில் தூா்வாரப்பட்ட வேம்ப ஊரணி, அன்னவாசல் ஊராட்சி ஒன்றியம், கட்டக்குடியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.17.64 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலக கட்டடம், வீரப்பட்டி ஊராட்சி சென்னப்ப நாயக்கன்பட்டியில் முதலமைச்சரின் குடிமராமத்து திட்டத்தின் கீழ் ரூ.5.50 லட்சம் மதிப்பில் மேற்கொள்ளப்பட்ட மங்களாகுளம் தூா்வாரும் பணி, வீரப்பட்டியில் தாய் திட்டத்தின் கீழ் ரூ. 30 லட்சம் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட அம்மா பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடம் பாா்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது.

இந்த ஆய்வின் போது குடிமராமத்து திட்டத்தின் கீழ் தூா்வாரப்பட்ட குளங்களில் மழைநீா் வந்து சோ்வதை உறுதி செய்யவும், நடைபெறும் பணிகளில் தரமான கட்டுமான பொருட்களை பயன்படுத்தி பணிகள் மேற்கொள்ளவும், பொது மக்கள் உடற்பயிற்சி கூடங்களை பயன்படுத்த விழிப்புணா்வு ஏற்படுத்தவும் துறை அலுவலா்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.மேலும் வளா்ச்சி திட்டப் பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா்.

இந்த ஆய்வில் மாவட்ட வன அலுவலா் ஆனந்தகுமாா், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் காளிதாசன், செயற்பொறியாளா் சேதுராமன், வட்டார வளா்ச்சி அலுவலா் கி. ரமேஷ், சிங்காரவேலு, பிரேமாவதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments