புதுக்கோட்டை குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் வேலைவாய்ப்பு!



புதுக்கோட்டை குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் குழந்தைகள் பதுகாப்பு அலுவலகத்தில் பாதுகாப்பு அலுவலர், சமூக பணியாளர், உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

புதுக்கோட்டையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு அரசின் சமூக பாதுகாப்புத்துறையில், தொகுப்பூதியம் அடிப்படையில் 3 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இது தொடர்பாக புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிக்கை வெளியாகியுள்ளது. அதன்படி, பாதுகாப்பு அலுவலர் பணிக்கு ஒரு காலியிடம் உள்ளது.
இந்த பணிக்கு பட்டதாரி/முதுகலை பட்டதாரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். குற்றவியல், கல்வியியல், குழந்தை வளர்ச்சி, உளவியல், சமூகப்பணி, சமூகவியல் துறையில் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். கல்வி, சமூக நலம், குழந்தை நலம் ஆகியவற்றில் மூன்று வருடம் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

சமூகப்பணியாளர்:

சமூகப்பணியாளர் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதரர்கள் டிகிரி, முதுகலைப்பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். குற்றவியல், உளவியல், சமூகப்பணி, சமூகவியல் வழிகாட்டுதல் ஆற்றுப்படுத்துததல் ஆகியவற்றில் பட்டம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். இரண்டு ஆண்டுகள் குழந்தைகள் நலம் சார்ந்த பணியில் முன்அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

உதவியாளர் மற்றும் கணினி இயக்குபவர்:

புதுக்கோட்டை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் உதவியாளர், கணினி இயக்குபவர் பணிக்கு ஒரு காலியிடம் உள்ளது. இதற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள், கணினி துறையில் டிப்ளமோ படிப்பு படித்திருக்க வேண்டும். மேலும், கம்பயூட்டர் ஆப்ரேட் செய்வதில் ஒரு வருடம் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள், https://cdn.s3waas.gov.in/s342e7aaa88b48137a16a1acd04ed91125/uploads/2019/11/2019111869.pdf என்ற இணையதளத்தில் விண்ணப்பம் பெற்று, அதனை பூர்த்தி செய்து நவம்பர் 30 ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

விண்ணப்பப்படிவம் அனுப்பும் போது, அத்துடன் அண்மையில் எடுக்கப்பட்ட புகைப்படம், கல்விச்சான்றிதழ் நகல் ஆகியவற்றை இணைக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவம் அனுப்ப வேண்டிய முகவரி:

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்,
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு,
மாவட்ட முன்னாள் படை வீரர்கள் நல அலுவலக வளாகம்,
கல்யாணராமபுரம் 1 ஆம் வீதி,
திருக்கோகர்ணம் அஞ்சல்,
புதுக்கோட்டை – 622 002

மேலும் தெரிந்து கொள்ள:

https://cdn.s3waas.gov.in/s342e7aaa88b48137a16a1acd04ed91125/uploads/2019/11/2019111878.pdf

https://cdn.s3waas.gov.in/s342e7aaa88b48137a16a1acd04ed91125/uploads/2019/11/2019111874.pdf
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments