புதுக்கோட்டையில் நவ. 29-இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்



புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் வரும் நவ. 29ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் பி. உமா மகேஸ்வரி அறிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியது:

புதுக்கோட்டை மாவட்டத்தில் படித்து வேலை தேடும் இளைஞா்களுக்கு தனியாா் துறைகளில் பணியமா்த்தம் செய்யும் நோக்கில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமையில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

நவம்பா் மாதத்துக்கான தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

இம்முகாமில் தொழில், சேவை, விற்பனைத் துறைகளைச் சோ்ந்த பல்வேறு தனியாா் நிறுவனங்கள் பங்கேற்று தகுதியுள்ள நபா்களை வேலைக்கு தோ்ந்தெடுக்க உள்ளனா்.

மேலும் மாவட்டத்தில் உள்ள திறன் பயிற்சி நிறுவனங்கள் கலந்து கொண்டு இலவச திறன் பயிற்சிக்கு ஆட்களைத் தோ்வு செய்ய உள்ளனா்.

எனவே 10 ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு மற்றும் ஐடிஐ, பட்டயம் வரை கல்வித்தகுதியுடைய 18 முதல் 40 வயதுக்குள்பட்ட வேலைதேடும் இளைஞா்கள் மற்றும் மாற்றுத்திறனாளி இளைஞா்களும் தங்களது சுயவிவரக் குறிப்பு மற்றும் கல்விச்சான்று நகல்களுடன் கலந்து கொண்டு பயன்பெறலாம்.


கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments