தீனியாத் மக்தப் ஆசிரியர் மற்றும் ஆசிரியைகளுக்கான ஒரு நாள் பயிற்சி முகாம் வருகின்ற 30.11.19 சனிக்கிழமை அன்று காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை மீமிசல் அருகாமையில் உள்ள ஏம்பக்கோட்டை ரஹீமா பரக்கத் தீனியாத் மக்தப் மதரஸாவில் நடைபெற உள்ளது.
கீழ்கண்ட தலைப்புகளில் பயிற்சி வழங்கப்பட இருக்கிறது.
- எளிய முறையில் நூராணிகாயிதா பயிற்றுவிக்கும் முறை.
- எளிய முறையில் திருக்குர்ஆன் பயிற்றுவிக்கும் முறை.
- உளவியல் ரீதியாக நபிவழியில் கற்றலும்,கற்பித்தலும்.
- மாணவர்களை இல்முடன் அமல் செய்யக் கூடியவர்களாக உருவாக்குவது.
- மக்தப் முன்னேற்றத்திற்கான ஆலோசனைகள்.
திறமையும், அனுபவமும் நிறைந்த ஆலிம் பெருமக்களைக் கொண்டு நடத்தப்படும் இந்த பயனுள்ள சிறப்பு விளக்க முகாம் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு ஆலிம்களையும், ஆலிமாக்களையும் அன்புடன் அழைக்கிறோம்.
குறிப்பு:
- முன்பதிவு அவசியம்.
- வருகைதரும் ஆலிம் மற்றும் ஆலிமாக்களுக்கு காலை, மதியம் உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
- இந்நிகழ்ச்சி தீனியாத் மக்தப் மதரஸா நடத்தக் கூடிய ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியைகளுக்கு மட்டுமே.
- பொதுமக்களுக்கு அனுமதி இல்லை.
அழைப்பின் மகிழ்வில்:
ரஹீமா பரக்கத் தீனியாத் மக்தப் மதரஸா,
ஏம்பக்கோட்டை,
மீமிசல்.
தகவல்:
ரஹீமா பரக்கத் மதரஸா நிர்வாகம்,
மற்றும் மக்தப் மேம்பாட்டுக்குழு.
தொடர்புக்கு: 79044 85255, 88832 86170, 81248 13976
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.