கிராமங்களுக்கு கூடுதலாக பேருந்துகள் இயக்க வேண்டும் பொதுமக்கள் வலியுறுத்தல்புதுக்கோட்டை மாவட்டத்தில் 497 கிராம பஞ்சாயத்துகள் உள்ளது. இந்த பகுதிகளில் மாணவர்கள் நகர் பகுதியில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவர்கள் படித்து வருகின்றனர். இவர்கள் பள்ளிக்கு சென்று வருவதற்கு தங்கள் கிராமத்திற்கு வரும் நகர பேருந்துகளில் பயனம் செய்கின்றனர்.

 புதுக்கோட்டை மாவட்டத்தில் பெருவராரியன பகுதிகளில் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு எத்த பேருந்து இயக்கப்பட்டதோ அந்த பேருந்து மட்டுமே தற்போது வரை பேருந்துகள் இயக்கப்படுகிறது. இதனால் மாணவர்கள், பொதுமக்கள் மிகுந்த சிரமங்களை அனுபவித்து வருகின்றனர்.

குறிப்பாக தற்போது தொடர்ந்து மக்கள் தொகை அதிகரிப்பு மற்றும் கிராமத்தில் இருந்து நகர் பகுதிக்கு படிப்போர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துவிட்டது. இதனால் கிராமத்திற்கு வரும் நகர பேருந்துகளில் பயணிகளின் கூட்டம் வழக்கத்தைவிட அதிகரித்துவிட்டது. இதானால் பேருந்துகளில் படிகளின் தொங்கிகொண்டு ஆபத்தான நிலையில் பயனிக்கின்றனர் மாணவ, மாணவிகள்.

இதனை கருத்தில் கொண்டு முக்கிய வழித்தடங்களில் மாணவர்களின் நலன்களை கருதி கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments