இண்டிகோ, கத்தார் ஏர்வேஸ் இடையே குறியீட்டுப் பகிர்வு ஒப்பந்தம்….!!குறைந்த கட்டண விமானச் சேவை நிறுவனமான இண்டிகோ, கத்தார் ஏர்வேஸுடன் ஒரு வழி குறியீட்டுப் பகிர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

விமானச் சேவை அளிப்பதில் முன்னணி நிறுவனமான இண்டிகோ, வாடிக்கையாளர்களுக்குக் குறைந்த கட்டணத்தில் விமானப் பயணத்தை அளித்து வருகிறது. சில தினங்களுக்கு முன் சர்வதேச விமான போக்குவரத்துக் கழகத்தின் (IATA) அங்கமானது இண்டிகோ ஏர்லைன்ஸ். தங்களின் சேவையை விரிவுபடுத்தும் நோக்கில் இந்நிறுவனம் பல திட்டங்களையும், பயணிகளுக்குச் சலுகைகளையும் அளித்து வருகிறது.இதனிடையில் கத்தார் ஏர்வேஸுடன் ஒரு வழி குறியீட்டுப் பகிர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

இதன் மூலம் தோஹா – டெல்லி, மும்பை – ஹைதராபாத் இடையேயான இண்டிகோ விமானங்களில் கத்தார் ஏர்வேஸின் குறியீட்டை (QR CODE) வைக்கும்.இதன்மூலம் இண்டிகோ பயணிகள் விமானத்தில் பயணம் செய்யும்போதே கத்தார் ஏர்வேஸில் பயணம் செய்யப் பதிவு செய்து கொள்ள முடியும்.

இது இண்டிகோ நிறுவனம் மேற்கொள்ளும் இரண்டாவது புரிந்துணர்வு ஒப்பந்தம் என்பது குறிப்பிடத்தக்கது.கத்தார் ஏர்வேஸ் தற்போது தோஹா, அகமதாபாத், அமிர்தசரஸ், பெங்களூரு, சென்னை, டெல்லி, கோவா, ஹைதராபாத், கொச்சி, கொல்கத்தா, கோழிக்கோடு, மும்பை, நாக்பூர், திருவனந்தபுரம் ஆகிய 13 இடங்களுக்கு இடையே 102 வாராந்திர விமானங்களை இயக்குகிறது.

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a comment

0 Comments