வெள்ளூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி: மாணவர்கள் அசத்தல்!



புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி ஒன்றியம், வெள்ளூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு பள்ளி அளவிலான அறிவியல் கண்காட்சி சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு பள்ளியின் பொறுப்பு தலைமையாசிரியர் சாமிநாதன் அனைவரையும் வரவேற்றார். கண்காட்சியினை முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் சக்தி வீரசேகர் தொடங்கி வைத்து மாணவர்களின் படைப்புகளைப் பார்வையிட்டார். அம்மாபட்டினம் ஆண்கள் நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் சுந்தரராஜ் முன்னிலை வகித்தார்.

சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற மணமேல்குடி வட்டார வளமைய மேற்பார்வையாளர் (பொறுப்பு) சிவயோகம், மாணவர்களிடையே அறிவியல் சிந்தனைகளை வளர்ப்பதன் அவசியம் குறித்து உரையாற்றினார்.

இக்கண்காட்சியில் மாணவர்கள் பல்வேறு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, ஆசிரியர்களின் வழிகாட்டுதலோடு தங்களது தனித்திறமைகளை வெளிப்படுத்தினர். குறிப்பாக, கழிவு காகிதங்களில் செய்யப்பட்ட கலைப் பொருட்கள், இதயத் துடிப்பு மாதிரி, சொட்டுநீர் பாசன முறை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விளக்க மாதிரிகள் பார்வையாளர்களைப் பெரிதும் கவர்ந்தன. மேலும், எளிய அறிவியல் சோதனைகள் மூலம் மாணவர்கள் தங்களது அறிவியல் அறிவை நிரூபித்து அசத்தினர்.

தொடர்ந்து, சிறந்த முறையில் படைப்புகளை உருவாக்கிய மாணவர்களுக்குப் பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டு, பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் அண்டை பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் ஜெய்சங்கர், கோவிந்தராஜ், ஜெயபால், ராம் நகர் பள்ளி ஆசிரியர் ஸ்டாலின் செல்வகுமார், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் எனப் பலர் திரளாகக் கலந்துகொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments