குவைத் நாட்டில் கொடுமைக்குள்ளாகும் தனது மகளை மீட்டு தர வேண்டும் என திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில் பெண் கோரிக்கை மனு அளித்தார்.
முத்துப்பேட்டை ஒன்றியம் சோழி செட்டியாக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் பிச்சையம்மாள், தனது பேத்தி சுருதி மற்றும் குடும்பத்தினருடன் நேற்று மாவட்ட கலெக்டர் ஆனந்திடம் ஒரு கோரிக்கை மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஒன்றியம் சோழி செட்டியாக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் பிச்சையம்மாள். இவருடைய மகள் சாந்தி. இவருக்கு திருமணமாகி சுபாஷினி, சுருதி ஆகிய 2 மகள்கள் உள்ளனர். குடும்ப பிரச்சினை காரணமாக கணவரை விட்டு பிரிந்து வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில் எனது மகள் குழந்தைகளை வளர்ப்பதற்கு மிகவும் சிரமப்பட்டதால் புதுக்கோட்டையை சேர்ந்த ஒருவர் மூலம் கடந்த 4-ந் தேதி குவைத் நாட்டிற்கு வேலைக்கு சென்றார்.
கொடுமை
அங்கு அவருக்கு எந்த வேலையும் வழங்கப்படாமல் தனி அறையில் அடைத்து வைத்துள்ளனர். உணவு கூட கொடுக்கப்படாமல் கொடுமைப்படுத்தி வந்துள்ளனர். இதில் எனது மகள் உடல் நலம் பாதிக்கப்பட்டு மயங்கி விழுந்துள்ளார். அவரை சிகிச்சைக்காக குவைத் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அப்போது செல்போனில் வாட்ஸ்-அப் மூலம் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து பேசி மகள் சுருதிக்கு அனுப்பி வைத்துள்ளார். எனவே எனது மகள் சாந்தியை உடனடியாக மீட்டு கொண்டு வர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மனுவை பெற்று கொண்ட கலெக்டர் ஆனந்த் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். இதேபோல் நாகை செல்வராஜ் எம்.பி அவர்களையும் சந்தித்து மனு அளித்தனர்.

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.