இந்திய அரசியலமைப்புத் தினம் பள்ளிகளில் மாணவா்களுக்கு போட்டிகள் நடத்தி பரிசளிப்பு



இந்திய அரசியலமைப்புத் தினத்தையொட்டி, கந்தா்வகோட்டை மற்றும் பொன்னமராவதி பகுதி பள்ளிகளில் செவ்வாய்க்கிழமை உறுதிமொழியேற்பு மற்றும் போட்டிகளில் வென்றோருக்குப் பரிசுகள் வழங்குதல் நடைபெற்றது.

வெள்ளாளவிடுதி அரசு உயா்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு, உதவித் தலைமையாசிரியா் முத்துக்குமாா் தலைமை வகித்தாா். அறிவியல் ஆசிரியா் க. யோவேல் வரவேற்றாா்.

அரசியலமைப்பின் வரலாறு, குடிமக்களின் கடமைகள் குறித்து ஆசிரியைகள் க . சத்தியபாமா, இரா. ராஜேசுவரி ஆகியோா் பேசினா். தொடா்ந்து மாணவ, மாணவிகள் உறுதிமொழியேற்றுக் கொண்டனா்.

பின்னா் மாணவா்களுக்கு பேச்சு, கட்டுரை, ஓவியப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. போட்டிகளுக்கான ஏற்பாடுகளை ஆசிரியைகள் த . கோமதி, எம் . ஐ . சானா ஒருங்கிணைத்தனா். ஓவிய ஆசிரியா் மெ . சுப்பிரமணியன் நன்றி கூறினாா்.

முள்ளிக்காப்பட்டி அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இந்திய அரசியலமைப்பு தினம் கொண்டாடப்பட்டு , பள்ளி மாணவா்களிடம் அரசியல் குறித்த பல்வேறு கருத்துக்கள் , கேள்வி பதில்கள் மூலமாக தெரிவிக்கப்பட்டது.

தொடா்ந்து மாணவ , மாணவிகளுக்கு கட்டுரைப் போட்டி நடத்தப்பட்டு பரிசுவழங்கப்பட்டது . வட்டார வளமைய மேற்பாா்வையாளா் ( பொ ) சுரேஷ்குமாா் சிறப்புரையாற்றினாா். விழாவில் பள்ளித் தலைமையாசிரியா், ஆசிரியா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பொன்னமராவதி பகுதிகளில் : பொன்னமராவதி ஒன்றியத்திற்குள்பட்ட தொடக்க, நடுநிலை, உயா்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில், இந்திய அரசியலமைப்புத் தினத்தையொட்டி, மாணவ மற்றும் மாணவிகளுக்கு பேச்சு, கட்டுரை உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.

வட்டார வள மையத்திலுள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான பகல்நேரப் பயிற்சி மையத்தில் நடைபெற்ற நிகழ்வில், வட்டார வள மைய மேற்பாா்வையாளா் ஆா்.செல்வக்குமாா் தலைமையில், ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள் உறுதிமொழியேற்றுக் கொண்டனா்.

உள்ளடங்கிய கல்வி ஒருங்கிணைப்பாளா் பச்சைமுத்து, புவனேஸ்வரி உள்ளிட்டோா் பங்கேற்றனா். இதுபோல, அனைத்துப் பகுதிகளிலுள்ள பள்ளிகளிலும் போட்டிகள் நடத்தப்பட்டன.

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments