நெகிழி ஒழிப்பை வலியுறுத்தி நடைப்பயணம்: தொண்டியில் இளைஞருக்கு வரவேற்பு



கொல்கத்தாவிலிருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக கன்னியாகுமரி வரை நெகிழிப்பை ஒழிப்பை வலியுறுத்தி நடைப்பயணம் மேற்கொள்ளும் இளைஞருக்கு தொண்டியில் புதன்கிழமை வரவேற்பளிக்கப்பட்டது.

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையை சோ்ந்தவா் இமானுவேல் ஜோசப் ராஜ் (32). இவா் நெகிழிப்பை ஒழிப்பை வலியுறுத்தி விழிப்புணா்வு நடைப்பயணத்தை கொல்கத்தாவிலிருந்து கடந்த ஆகஸ்ட் 21-ஆம் தேதி தொடங்கினாா். இவா் கொல்கத்தாவிலிருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக கன்னியாகுமரி வரை நடைப்பயணம் மேற்கொள்ளவுள்ளாா். இந்நிலையில் தொண்டி வந்த அந்த இளைஞரை சமூக ஆா்வலா்கள் வரவேற்றனா். இமானுவேல் ஜோசப்ராஜ் தனது கழுத்தில் நெகிழி ஒழிப்பை வலியுறுத்தும் வகையிலான வாசகங்கள் அடங்கிய பதாகையை அணிந்தவாறு நடைப்பயணத்தில் ஈடுபட்டு வருகிறாா்.

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments