குரூப்-1 நேர்முகத் தேர்வு திட்டமிட்ட தேதியில் நடக்கும்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்புஉள்ளாட்சித் தேர்தல் காரணமாக குரூப்-1 நேர்முகத் தேர்வு உள்ளிட்ட சில தேர்வுகள் தள்ளி வைக்கப்படவில்லை என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

“உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவிருப்பதை முன்னிட்டு 22.12.2019 முதல் 30.12.2019 வரை நடைபெறவிருந்த துறைத் தேர்வுகள் மட்டும் ஒத்திவைக்கப்பட்டு 05.01.2020 முதல் 12.01.2020 வரை நடைபெறும்.

மற்றபடி குரூப்-1 (தொகுதி – 1)- ல் அடங்கிய பதவிகளுக்கான நேர்காணல் தேர்வு திட்டமிட்டபடி 23.12.2019 முதல் 31.12.2019 வரை (25.12.2019 மற்றும் 29.12.2019 நீங்கலாக) தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெறும்.

மேலும் திட்ட அலுவலர் (Project Officer) / உளவியலாளர் (Psychologist) மற்றும் சிறை அலுவலர் (Jailor) ஆகிய பதவிகளுக்கான எழுத்துத் தேர்வுகளும் திட்டமிட்டபடி 21.12.2019 மற்றும் 22.12.2019 ஆகிய இருநாட்களில் நடைபெறும்”.

இவ்வாறு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a comment

0 Comments