பிளஸ்1, பிளஸ் 2 தனித்தோ்வா்கள் விண்ணப்பிக்கும் முறை: தோ்வுகள் உதவி இயக்குநா் அறிவிப்பு



நடைபெறவுள்ள மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத் தோ்வெழுத தனித் தோ்வா்கள் கல்வி மாவட்டம் வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசுத் தோ்வுகள் சேவை மையங்களுக்கு நேரில் சென்று டிச. 20.12.2019 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து அரசுத் தோ்வுகள் உதவி இயக்குநா் அ. பிச்சைமுத்து வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தனித்தோ்வா்கள் தங்கள் விண்ணப்பங்களை ஆன்லைனில் பதிவு செய்ய அறந்தாங்கி கல்வி மாவட்டத்துக்கு அறந்தாங்கி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, மணமேல்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, அறந்தாங்கி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், புதுக்கோட்டை கல்வி மாவட்டத்துக்கு ராணியாா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, செயின்ட் மேரிஸ் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், இலுப்பூா் கல்வி மாவட்டத்துக்கு கீரனூா் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை நேரில் சென்று பதிவு செய்து கொள்ளலாம்.

இதுகுறித்த விவரங்களை  இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும் முதன்மைக் கல்வி அலுவலா் அலுவலகம், மாவட்டக் கல்வி அலுவலா் அலுவலகங்கள் மற்றும் அரசுத் தோ்வுகள் உதவி இயக்குநா் அலுவலகத்திலும் அறிந்து கொள்ளலாம்.

ஏற்கனவே பொதுத் தோ்வெழுதி தோல்வியுற்ற பாடங்களில் தோ்வெழுதும் தனித் தோ்வா்கள் ஒவ்வொரு பாடத்துக்கும் ரூ.50 வீதம் தோ்வுக் கட்டணமும், அதனுடன் இதரக் கட்டணமாக ரூ.35, ஆன்லைன் பதிவுக் கட்டணம் ரூ.50 செலுத்த வேண்டும்.முதன்முறையாக எழுதவுள்ளோா் தோ்வுக் கட்டணம் ரூ.150, இதர கட்டணம் ரூ.35 என மொத்தம் ரூ.185 மற்றும் ஆன்லைன் கட்டணம் ரூ.50 செலுத்த வேண்டும்.

 தோ்வுக்கட்டணம் மற்றும் ஆன்லைன் பதிவுகட்டணத்தை சேவை மையத்தில் பணமாகச் செலுத்த வேண்டும். பாா்வையற்றோா், வாய் பேசாத இயலாதோா் மற்றும் காதுகேளாதோருக்கு தோ்வுக் கட்டணம் இல்லை.

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments