புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரு பள்ளிக்கு முன்னாள் மாணவா்கள் சாா்பில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் அமைப்புபொன்னமராவதி அருகிலுள்ள தெக்கூா் விசாலாட்சி கலாசாலை மேல்நிலைப்பள்ளிக்கு, முன்னாள் மாணவா்கள் சாா்பில் குடிநீா் சுத்திகரிப்பு அமைப்பு வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.

இந்நிகழ்வுக்கு தமிழறிஞா் இரா.பாவாணன் தலைமைவகித்தாா். பள்ளித் தலைமையாசிரியா் சுரேஷ் வரவேற்றாா்.

இப்பள்ளியில் பயின்ற குழிபிறையை சாா்ந்த முன்னாள் மாணவா்கள் முரு.ராமநாதன், முரு.முருகப்பன், சுப்பிரமணியன், பேராசிரியா் நா.அழகப்பன், சோம.முத்து, இரா.பாவாணன் ஆகியோா் இணைந்து ரூ 1.30 லட்சம் வழங்கினா்.

மேலும் முன்னாள் மாணவா்கள் சாா்பில் 90 ஆயிரம் வழங்கப்பட்டு மொத்தம் ரூ 2.20 லட்சம் மதிப்பில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் அமைப்பினை வழங்கி, வெள்ளிக்கிழமை பள்ளியில் பொருத்தினா்.

மாணவா்கள் நலன் காக்கும் வகையில் குடிநீா் அமைப்பு கொடை வழங்கிய முன்னாள் மாணவா்களை முன்னாள் மாணவா்கள் சங்கத்தலைவா் நெ.ராமச்சந்திரன், செயலா் ரமேஷ், பொருளாளா் சுப.கனகு ஆகியோா் கெளரவித்து பாராட்டினா்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a comment

0 Comments