பி.இ. படித்தவர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வு (டெட்) எழுதலாம்..!



பொறியியல் துறையில் எந்த பிரிவை எடுத்து படித்து பி.இ  முடித்தவர்கள் இனி டெட் எனும் ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதி கணித ஆசிரியராக பணிபுரியலாம் என தமிழக அரசு அனுமதி வழங்கி உத்தரவுபிறப்பித்துள்ளது.


உலக அளவில் மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வரும் நிலையில், கடந்த 10 ஆண்டுகளாக பொறியியல் துறையில் வேலையிண்மை அதிகரித்துள்ளதால், பொறியியல் படித்த மாணவர்களில் பெரும்பாலானோர் அரசு நடத்தும் போட்டித் தேர்வுகளுக்கு முயற்சித்து வருகின்றனர். சிலர் வாய்ப்பு கிடைக்கு துறைகளில் பணி செய்து வருகின்றனர். தமிழகம் உள்பட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை விகிதமும் வெகுவாக குறைந்துள்ளது. மாணவர் சேர்க்கை இல்லாததால் நிறைய பொறியியல் கல்லூரிகள் மூடப்பட்டு வருகின்றன. 

2015 - 2016 ஆம் ஆண்டுகளில் பி.எட் கல்லூரிகளில்  20 சதவீதம் இடங்கள் பொறியியல் மாணவர்களுக்கு  ஒதுக்கப்பட்டாலும், மாணவர்கள் அதிகம் சேராததால் 5 சதவீதமாக குறைக்கப்பட்டது. 

இந்நிலையில், பொறியியல் துறையில் எந்தப் பிரிவை படித்தவர்களும் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை கணித ஆசிரியராக பணிபுரியலாம் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. 

அவர்கள் தமிழக ஆசிரியர் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் டெட் எனும் ஆசிரியர் தகுதித் தேர்வுகள் எழுதி தேர்ச்சி பெற்று 6 முதல் 8 ஆம் வகுப்புகளுக்கு கணித ஆசிரியராகலாம் என தமிழக அரசு அனுமதி வழங்கி ஆணை பிறப்பித்துள்ளது. 

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments