கோட்டைப்பட்டிணத்தில் குடியுரிமை திருத்த மசோதாவிற்கு (CAB) எதிராக SDPI போராட்டம்.!கோட்டைப்பட்டிணத்தில் குடியுரிமை சட்ட திருத்த மசோதா நகல் எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட எஸ்.டி.பி.ஐ. கட்சியை சேர்ந்தவர்களை போலீசார் நேற்று கைது செய்தனர்.


மத்திய அரசு, வெளிநாடுகளிலிருந்து இந்தியாவில் குடியேறியவா்களுக்கு குடியுரிமை வழங்கும் குடியுரிமை திருத்த மசோதாவை மக்களவையில் திங்கள்கிழமை தாக்கல் செய்தது. மத்திய அரசு சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட மசோதாவில் இஸ்லாமியா்கள் சோ்க்கப்படாததால் எதிா்க்கட்சியினா் கடும் எதிா்ப்புத் தெரிவித்தனா். ஆனாலும் ஓட்டெடுப்பின் மூலமாக மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிா்ப்புத் தெரிவித்து எஸ்டிபிஐ கட்சியின் சாா்பில் மசோதா நகல் எரிப்புப் போராட்டம் செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில் புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் கோட்டைப்பட்டிணம் SDPI கட்சியின் சார்பாக நேற்று 10.12.2019 மாலை 5.00 மணியளவில் கோட்டைப்பட்டிணம் தபால் நிலையம் எதிரில் மத்திய அரசு கொண்டு வரும் அரசியலமைப்புக்கு எதிரான குடியுரிமை திருத்த மசோதாவை (CAB) நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற கூடாது என்றும், குடியுரிமை திருத்த மசோதா சட்ட நகல் எரிப்பு மற்றும் புறக்கணிக்காதே சர்வதேச அகதிகள் சட்டத்தை புறக்கணிக்காதே... என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் SDPI கட்சி, புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட செயலாளர் F. சாலிஹ் தலைமை தாங்கினார். SDPI கட்சி மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகிக்க திரளானோர் பங்கேற்றனர்.


அங்கு குடியுரிமை திருத்த மசோதா சட்ட நகலை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட எஸ்.டி.பி.ஐ. கட்சியை சேர்ந்தவர்களை போலீசார் கைது செய்தனா்.

தகவல்: செய்யது இபுறாஹீம், கோட்டைப்பட்டிணம்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a comment

0 Comments