குவைத்தில் தொலைந்தவரை மீட்டுவரத் தயாரானது இந்தியா!



குவைத்தில் காணாமல் போன ராமநாதபுரத்தைச் சேர்ந்த கருப்பசாமியை மீட்க தயார் என இந்தியத் தூதரகம் ட்வீட்!

   ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே சேது ராஜபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்பசாமி. இவர் குவைத் நாட்டிற்கு பணிக்குச் சென்ற நிலையில் கடந்த ஒரு மாதமாக அவரிடமிருந்து எந்த தொடர்பும் இன்றி மாயமாகி விட்டதால் அவரை பத்திரமாக மீட்டு தாயகம் அழைத்து வரக் கோரிக்கை வைத்து மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவிடம் குப்புசாமியின் மனைவி மற்றும் தாயார் உள்ளிட்ட உறவினர்கள் கோரிக்கை மனு அளித்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ள எஸ்.டி. சேதுராஜபுரம் என்னும் கிராமத்தைச் சேர்ந்த கருப்பசாமி பிழைப்பிற்காக 2014 ஆம் ஆண்டு குவைத் நாட்டிற்கு வாகன ஓட்டுநர் பணிக்குச் சென்றதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் 2017ஆம் ஆண்டு விடுமுறையில் ஊர் திரும்பிய அவர் இரண்டு மாத விடுமுறையை ஊரில் கழித்த பின் மீண்டும் குவைத் நாட்டிற்கு சென்றுள்ளார்.

இதனையடுத்து கடந்த மாதம் வீட்டிற்கு தொலைபேசியில் தொடர்பு கொண்ட அவர் தன்னுடைய பாஸ்போர்ட் தொலைந்து விட்டதாக கூறும் தன்னுடைய முதலாளி பாஸ்போர்ட் புதுப்பிக்க ஒத்துழைப்பு தர மறுப்பதாகவும் மேலும் ஊருக்குச் செல்லவும் அனுமதி தராமல் தன்னிடம் வம்பு செய்வதாகக் கூறியுள்ளார்.

அதன்பின் எந்தவொரு அழைப்பும் கருப்புசாமியிடமிருந்து வரவில்லை. அதிர்ச்சியடைந்த தாயும் உறவினர்களும் கருப்பசாமியின் உறவினரை தொடர்பு கொண்டனர். ஆனால் அவர்களும் எந்த விவரமும் தெரியவில்லை என்றனர். இதனால் கருப்புசாமியைக் காணவில்லை என அவரது உறவினர் ராமநாதபுரம் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

இந்த செய்தி பத்திரிகை டிவி சேணல்களில் ஒளிப்பரப்பட்டதையடுத்து இப்போது இந்திய தூதரகம் தனது ட்விட்டர் பக்கத்தில் கருப்பசாமி குறித்த தகவல்களை தங்களிடம் பகிரும்படி கோரிக்கை வைத்து ட்வீட் ஒன்றைப் பதிவிட்டுள்ளது. தகவலைப் பெற்றுக் கொண்ட இந்திய தூதரகம் விரைவில் கருப்பசாமி மீட்கப்படுவார் என்ற செய்தியைக் கருப்பசாமியின் குடும்பத்தாரிடம் தெரிவிக்கும்படி ட்வீட்டையும் செய்துள்ளது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments