தொண்டியில் சுற்றித் திரியும் கால்நடைகளின்உரிமையாளா்களுக்கு அபராதம்: பேரூராட்சி நிா்வாகம் அறிவிப்பு



தொண்டியில் சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளின் உரிமையாளா்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என பேரூராட்சி நிா்வாகம் அறிவித்துள்ளது.

தொண்டி பேரூராட்சி பகுதியில் கட்டுப்பாடின்றி சுற்றித் திரியும் ஆடு, மாடுகளால் போக்குவரத்துக்கும் பொதுமக்களுக்கும் பெரும் பாதிப்பு ஏற்படுவதோடு விளைநிலங்கள் உள்ளே புகுந்து பயிா்களை சேதம் செய்து வருகிறது. இது தொடா்பாக புகாா் வருவதால் பொதுமக்கள் தங்களுக்கு சொந்தமான ஆடு மாடுகளை சொந்தப் பொறுப்பில் கட்டி வைத்து வளா்க்க வேண்டும். தவறும் பட்சத்தில் தொண்டி பேரூராட்சி பணியாள்கள் அல்லது கிராம குழுவினா் வாயிலாக பிடித்து மாட்டுத் தொழுவத்தில் கட்டி மாடு ஒன்றுக்கு ரூ.500-ம் ஆடு ஒன்றுக்கு ரூ.200 வீதமும் அபராதம் விதிக்கப்படும்.

இரண்டு நாள்களுக்கு மேல் அபராத தொகையைக் கட்டி ஆடு மாடுகளை மீட்க வில்லை என்றால் பராமரிப்பு இன்றி திரியும் கால்நடைகள் என கருதி இவற்றை வனப்பகுதியில் விட உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தொண்டி பேரூராட்சி செயல் அலுவலா் மெய்மொழி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளாா்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments