கோபாலப்பட்டிணத்தில் வரத்து வாய்க்கால்களில் அடைப்புகளை சரி செய்த ஜமாத்தார்கள்..!
கோபாலப்பட்டிணத்தில் வரத்து வாய்க்காலில் ஏற்பட்ட அடைப்பை ஜமாத் மற்றும் பொதுநல அமைப்புகள் சரிசெய்தனர்.


புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் ஒன்றியம், நாட்டாணிபுரசக்குடி ஊராட்சிக்குட்பட்ட கோபாலப்பட்டிணத்தில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்தது. இதனால் கோபாலப்பட்டிணத்தில் உள்ள குளங்கள் அனைத்தும் நான்கு வருடங்களுக்கு பிறகு முழு கொள்ளளவை எட்டியது. எனவே காட்டு குளத்தில் உடைப்பு ஏற்படாமல் தடுக்கும் வகையில் குளத்திற்கு செல்லும் மழைநீரை வரத்து வாய்க்கால் வழியாக அரண்மனை தோப்பு பகுதிக்கு நேற்று காலை 01.12.2019 ஞாயிற்றுக்கிழமை ஊர் ஜமாத் மற்றும் பொதுநல அமைப்புகள் இணைந்து வாய்க்காலில் உள்ள அடைப்புகளை அகற்றி உபரிநீர் திருப்பிவிடப்பட்டது.

மேலும் நெடுக்குளம் மற்றும் காட்டுக்குளங்களில் உடைப்புகள் ஏற்படாத வண்ணம் குளத்தின் நீர்மட்டத்தை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

இந்த சிறப்பான பணியை செய்த ஊர் ஜமாத் மற்றும் பொதுநல அமைப்புகளுக்கு GPM மீடியா சார்பாக நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments