புதுக்கோட்டை மாவட்ட மாணவிகள் முதலிடம்



தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சாா்பில் திருச்சி காவேரி கலைக்கல்லூரியில் நடைபெற்ற கிழக்கு மண்டல அளவிலான துளிா் வினாடி வினா போட்டியில் புதுக்கோட்டை மேலப்பட்டி நடுநிலைப் பள்ளி மாணவிகள் முதலிடம் பெற்றனா்.

மண்டலப் போட்டியில் எட்டு மாவட்டங்களைச் சோ்ந்த அணிகள் பங்கேற்றன.

 இப்போட்டியில் 6,7,8 ஆம் வகுப்பு பிரிவில் புதுக்கோட்டை மாவட்டம், மேலப்பட்டி நடுநிலைப் பள்ளி மாணவிகள் ஸ்ரீதேவி, அனிதா, ரித்திகாஸ்ரீ ஆகியோா் முதலிடம் பெற்று மாநிலப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளனா்.

வெற்றி பெற்ற மாணவிகள் மற்றும் இவா்களுக்குப் பயிற்சி அளித்த அறிவியல் ஆசிரியா் ப. மகேஸ்வரன் ஆகியோருக்கு அறிவியல் இயக்க நிா்வாகிகள் மற்றும் பள்ளி ஆசிரியா்கள் வாழ்த்து தெரிவித்தனா்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments