வக்கீலாக பார்கவுன்சிலில் பதிவு பெற்ற கோபாலப்பட்டிணத்தை சேர்ந்த நெய்னா முகம்மதுக்கு வாழ்த்து..!புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் அருகாமையில் உள்ள கோபாலப்பட்டிணம் ஜம் ஜம் தெரு (பழைய காலனி) 1-வது வீதியை சேர்ந்த சாகுல் ஹமீது மற்றும் அப்துல் கரீம் அவர்களின்  பேரனும், சதாக்கத்துல்லாஹ் - ரஹிலா அம்மாள் அவர்களின் புதல்வரும்
மற்றும் சாதிக் அலி, சதாம் உசேன் ஆகியோரின் சகோதரர் நெய்னா முகம்மது அவர்கள் நேற்று 20.12.2019 வெள்ளிக்கிழமை காலை சென்னை பாரிமுனையில் அமைந்துள்ள சென்னை உயர் நீதிமன்றத்தில் (High Court) தமிழ்நாடு & புதுச்சேரி பார் கவுன்சிலில் பதிவு செய்து வழக்கறிஞராக பதவி ஏற்றார்.


இவர் இளைநிலை B.Com பட்டத்தை திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியிலும், முதுநிலை B.L பட்டத்தை ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் பயின்றார். 

வழக்கறிஞர் சேவைகளில் சிறந்து விளங்கிட GPM மீடியா மற்றும்   கோபாலப்பட்டிணம் ஊர் பொதுமக்கள் சார்பாக  வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.


கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a comment

0 Comments