ஆவுடையார்கோவில் ஊராட்சி ஒன்றியத்தில் 34 ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவிக்கு 144 பேர் போட்டி.!




ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்பு மனுவை திரும்ப பெறுவதற்கான காலக்கெடு நேற்று முன்தினம் மாலை 3 மணியுடன் முடிவடைந்தது.
ஆவுடையார்கோவில் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட 35 கிராம ஊராட்சிகளில் ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட்டவர்களில் பலர் தங்களது வேட்பு மனுகளை திரும்ப பெற்றுக் கொண்டனர். பாண்டு பத்திரம் ஊராட்சியில் கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்த வீரபாண்டியன் தவிர மற்றவர்கள் தங்களது வேட்பு மனுக்களை திரும்பப் பெற்றதால் அவர் போட்டியின்றி பாண்டி பத்திரம் ஊராட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.


பாண்டிபத்திரம் தவிர மீதமுள்ள 34 கிராம ஊராட்சிகளில் ஊராட்சி தலைவர்பதவிக்கு 144பேர் போட்டியிட்கின்றனர். குண்டகவயல், வேட்டனூர், நாட்டாணிபுரசக்குடி, திருப்பெருந்துறை ஆகிய 4 ஊராட்சிகளில் அதிகபட்சமாக தலா 4 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்களுக்கு குலுக்கல் முறையில் சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

ஆவுடையார்கோவில் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 15 ஒன்றியக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தலில் அதிமுக, திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகள், சுயேச்சைகள் என 68 பேர் போட்டி விடுகின்றனர். இவர்களில் புதுக்கோட்டை தெற்கு மாவட்ட திமுக இளைஞர்ரணி துணை அமைப்பாளர் சிவசங்கர், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் சுந்தரபாண்டியன் உள்ளிட்டோர் திமுக சார்பிலும், ஆவுடையார் கோவில் ஒன்றிய முன்னாள் ஒன்றியக்குழுத் தலைவர் ராஜேஸ்வரி, ஆவுடையார்கோவில் ஒன்றிய அதிமுக செயலாளர் கூத்தையா மனைவி பாலசுந்தரி உள்ளிட்டோர் அதிமுக சார்பிலும் போட்டியிடுகின்றனர். இதேபோல ஊராட்சி மன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டிடும் வேட்பாளர்களுக்கும் குலுக்கல் முறையில் சின்னங்கள் ஒதுக்கப்பட்டன.

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments