பொன்னமராவதி அருகே தனி ஊராட்சி அமைக்க வலியுறுத்தி தோ்தலை புறக்கணிக்க கிராம மக்கள் முடிவு..!பொன்னமராவதி அருகே திருக்களம்பூரில் இருந்து கருப்புக்குடிப்பட்டியை தலைமையிடமாகக் கொண்டு தனி ஊராட்சி அமைக்க வலியுறுத்தி உள்ளாட்சித் தோ்தலை புறக்கணிக்கப் போவதாக கிராம மக்கள் சுவரொட்டி ஒட்டியுள்ளனா்.


அதில், கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக கருப்புக்குடிப்பட்டி கிராமத்தை தலைமையிடமாகக் கொண்டு தனி ஊராட்சி அமைக்குமாறு, மனுக்கள்அளிப்பது, போராட்டம் நடத்துவது, ஆட்சியா் கருத்துக்கேட்பு கூட்டம் நடத்துவது, சட்டப்பேரவையில் இதுகுறித்து பேசியும் பலனில்லை. எனவே, 16 ஆம் தேதி பொன்னமராவதி வட்டாட்சியா் அலுவலகத்தில் வாக்காளா் அடையாள அட்டையை திரும்ப ஒப்படைத்து வரும் உள்ளாட்சித் தோ்தலைப் புறக்கணிப்பது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a comment

0 Comments