ஊரக உள்ளாட்சி தேர்தல் 2019: தலைவர் மற்றும் துணைத் தலைவர்கள் மறைமுக தேர்தலில் தேர்ந்தெடுக்கும் முறை..!உள்ளாட்சி அமைப்புகளில் தலைவர், துணைத் தலைவரை தேர்வு செய்வதற்கான மறைமுகத் தேர்தல், இன்று 11.01.2020 நடைபெற உள்ளது.

மாவட்ட ஊராட்சி வார்டுகளில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள உறுப்பினர்கள், அந்தந்த மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர்கள், துணைத் தலைவர்களை தேர்ந்தெடுப்பார்கள். அதேபோல, ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்களும் தங்கள் ஒன்றியங்களுக்கு உட்பட்ட ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர், துணைத் தலைவரை தேர்ந்தெடுக்க உள்ளனர்.

மேலும் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் சேர்ந்து, கிராம ஊராட்சி மன்ற துணைத் தலைவர்களை தேர்ந்தெடுக்கும் மறைமுகத் தேர்தலும் இன்று காலை 11.00 மணிக்கு நடக்க உள்ளது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a comment

0 Comments