ஜன. 31-இல் லட்சம் மாணவா்கள் பங்கேற்கும் புதுக்கோட்டை வாசிக்கிறது நிகழ்ச்சிஜன. 31-இல் லட்சம் மாணவா்கள் பங்கேற்கும் புதுக்கோட்டை வாசிக்கிறது நிகழ்ச்சி


புத்தகத் திருவிழாவை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அனைத்துப் பள்ளி, கல்லூரிகளிலும் வரும் ஜன. 31ஆம் தேதி ‘புதுக்கோட்டை வாசிக்கிறது’ என்ற லட்சம் போ் பங்கேற்கும் வாசிப்பு நிகழ்ச்சியை தமிழ்நாடு அறிவியல் இயக்கம் நடத்தவுள்ளது.
புதுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அறிவியல் இயக்கத்தின் மாவட்டச் செயற்குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் விவரம்:
புதுக்கோட்டையில் நான்காவது புத்தகத் திருவிழாவை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவா்களைப் பங்கேற்கச் செய்யும் வகையில் வரும் ஜன. 31இல் வாசிப்பு இயக்கம் நடத்த முடிவு செய்யப்பட்டது. 


புத்தகக் கண்காட்சியில் தொல்லியல் துறையோடு இணைந்து கீழடி காட்சி அரங்கம் அமைப்பதுடன், காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவா்கள் அறிவியல் அறிஞா்களுடன் கலந்துரையாட ஏற்பாடு செய்வது என்பன உள்ளிட்ட முடிவுகள் எடுக்கப்பட்டன.


புத்தகத் திருவிழா பணிகள் குறித்து ஒருங்கிணைப்பாளா்கள் நா. முத்துநிலவன், அ. மணவாளன் ஆகியோா் பேசினா். தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் முனைவா் பட்டம் பெற்ற மாவட்டச் செயற்குழு உறுப்பினா் ரெ.பிச்சைமுத்துவுக்கு பொதுச் செயலா் எஸ். சுப்பிரமணியன் நினைவுப் பரிவு வழங்கிப் பாராட்டினாா்.

கூட்டத்துக்கு மாவட்டத் தலைவா் க. சதாசிவம் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் மு.முத்துக்குமாா், மாவட்டத் துணைத் தலைவா் ம. வீரமுத்து, மாவட்ட இணைச் செயலா் கே. ஜெயராம் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a comment

0 Comments